ரூ.3.42 கோடி பறிமுதல்

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட வங்கி பணம் ரூ.3.42 கோடியை பறக்கும் படையினர் கைப்பற்றினர்.


வத்தலக்குண்டு வெங்கடாஸ்திரி கோட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். மதுரை சென்ற வேனை சோதனை செய்தபோது அதில் 3.42கோடி பணம் இருந்தது. விசாரணையில் தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளத்தில் உள்ள கரூர் வைசியா வங்கிகளில் பெறப்பட்ட பணம் மதுரைக்கு எடுத்து செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ. 3.42 கோடியை அதிகாரிகள் கைப்பற்றி நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement