137 பவுன் தங்க நகைகள் மாயம்; பணிப் பெண்களிடம் விசாரணை
நாகர்கோவில்: நாகர்கோவிலில் வீட்டு பீரோவில் இருந்த 137 பவுன் தங்க நகைகள் மாயமானது குறித்து பணிப்பெண்கள் இருவர் உட்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
நாகர்கோவில் வடசேரி வணிகர் தெருவை சேர்ந்த தாமஸ் ராஜப்பன் மனைவி ஜெயசாந்தினி 60. இவர் வீட்டில் தனது வயதான தந்தையுடன் வசிக்கிறார். தனது மகள் பிரசவத்திற்காக குளச்சல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ஜெயசாந்தினி அங்கு சென்றார்.
தந்தையை பார்த்துக் கொள்வதற்காக வீட்டில் பணிபுரியும் வடசேரியை சேர்ந்த வசந்தி 45, சுகுணா ஆகியோரிடம் வீட்டு சாவியை கொடுத்துள்ளார்.
மகளின் பெயரில் நிலம் வாங்குவதற்காக நகையை விற்க முடிவு செய்த ஜெயசாந்தினி, மார்ச் 15 அன்று பீரோவை திறந்தார். அப்போது அதிலிருந்த 137 பவுன் தங்க நகைகள் மாயமாகியிருந்தன.
ஜெயசாந்தினி வடசேரி போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், சுகுணா, வசந்தி மற்றும் அவரது கணவர் சசிகுமார் ஆகியோரை பிடித்து விசாரிக் கின்றனர்.
வீட்டில் பதிந்திருந்த கைரேகைகளுடன் இவர்களது கைரேகைகளை ஒப்பிட்டு ஆய்வு செய்வதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும்
-
பாஜ ஜாடிக்கு ஏற்ற மூடி அதிமுக; முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
-
டில்லியில் ஆயுத கடத்தல் கும்பல் சிக்கியது; வெளிநாட்டுத் தயாரிப்பு ஆயுதங்கள் மீட்பு
-
மீண்டும் உயருது தங்கம் விலை: சவரனுக்கு ரூ.2800 அதிகரிப்பு
-
டில்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் முதல் அதிமுக தேர்தல் பிரசாரம் வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 25)
-
23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக
-
மேற்காசிய நாடுகளுக்கு மேலும் படைகளை அனுப்பும் அதிபர் டிரம்ப்