கொலம்பியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது; வீரர்கள் 66 பேர் உயிரிழப்பு
கொகாடோ: கொலம்பியா நாட்டு ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில், வீரர்கள் 66 பேர் உயிரிழந்தனர்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள பியூர்டோ லெகுயிசாமோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ராணுவ விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானத்தில் 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர். தகவல் அறிந்து விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு, மீட்பு படையினர் விரைந்தனர். இந்த விபத்தில் 66 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தீவிர விசாரணை நடந்து வருகிறது. விமானம் விழுந்த இடத்தில் கரும்புகைகள் வெளியேறும் காட்சிகள் இணையத்தில் வெளியானது.
வாசகர் கருத்து (3)
NALAM VIRUMBI - Madurai,இந்தியா
24 மார்,2026 - 08:38 Report Abuse
ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் புது புது தொழில்நுட்பங்கள் வந்தாலும் நம்மை மீறி என்னென்னவோ நடக்கின்றன. இயற்கையின் முன்னால் மனிதன் ஒரு தூசுதான். அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விபத்தும் சற்றும் நினைத்து பாராதது. 0
0
Reply
raha - ,
24 மார்,2026 - 08:32 Report Abuse
ஆழ்ந்த இரங்கல் 0
0
Reply
raja - ,
24 மார்,2026 - 08:31 Report Abuse
Rip 0
0
Reply
மேலும்
-
கனவுகளால் கடலை வென்ற பார்வையற்ற பெண்
-
கள் இறக்கும் எளியவர்கள் பயங்கரவாதிகளா? தேர்தல் பிரசாரத்தில் சீமான் ஆவேச கேள்வி
-
அரசு மருத்துவமனையில் ஆட்டிசம் விழிப்புணர்வு
-
தொண்டர்கள் 'அட்ராசிட்டி': 'பளார்' விட்ட திருமா
-
எப்போதும் ஏ.சி.யில் இருக்கிறீர்களா? உடனே எலும்பு பரிசோதனை செய்ங்க!
-
புறவழி சாலைக்காக முடக்கப்பட்ட நிலங்கள்: நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விடுவிப்பு
Advertisement
Advertisement