இந்த முறை ஓட்டு யாருக்கு? ஏன்?
ஊழல் அற்ற ஆட்சி விஜய் தருவார்!
நா ன் இந்த தடவை தெளிவா இருக்கேன். என் ஓட்டு த.வெ.க.,-வுக்குத்தான். 'விஜய்க்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கு?'ன்னு மத்த கட்சிக்காரங்க கேக்குறாங்க. எனக்குத் திருப்பி கேட்க ஒரு கேள்வி இருக்கு. இத்தனை வருஷமா அனுபவம்னு சொல்லிட்டு ஆட்சி பண்ணவங்களோ, அவங்களோட வாரிசுகளோ என்ன பண்ணிட்டாங்க?
விஜய் அண்ணா அரசியலுக்கு வந்தா, நிச்சயம் ஒரு நல்ல மாற்றம் வரும்னு நம்பறேன். சீமானுக்கு ஓட்டு வங்கி அதிகமாகுதுன்னு தெரிஞ்ச உடனே, அவர் மேல இல்லாத பழியெல்லாம் போட்டாங்க. அதே வேலையைத்தான் இப்ப விஜய் அண்ணா மேலயும் பண்றாங்க. அவர்மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாம் ஏத்துக்கவே முடியாது. இது முழுக்க முழுக்க அவரோட தனிப்பட்ட வாழ்க்கை. ஆனா அதை வச்சு அரசியல் பண்றது சரியில்லை.
மத்த கட்சிகள்ல வேட்பாளர் யாரு, ஜாதி என்னன்னு பார்ப்பாங்க. ஆனா த.வெ.க-.,வுல 'விஜய்'ங்கிற அந்த ஒரு முகத்துக்காகவே நாங்க ஓட்டு போடுவோம். அவர் சொன்ன திட்டங்கள்ல ஒரு நேர்மை தெரியுது.
முதல் அஞ்சு வருஷம் அவரோட இமேஜுக்காக ஓட்டு போடுறோம்னா, அடுத்த அஞ்சு வருஷம் அவர் செஞ்ச சாதனைகளுக்காக ஓட்டு போடுவோம்.
-எம்.திருசபரீஸ், 20,
சமூகப்பணி மாணவர், திருப்பூர்
அண்ணாமலையை மாற்றியது தவறு!
இது என் முதல் ஓட்டு. தற்போது தி.மு.க., தமிழகத்தில் வலுவாக உள்ளது. முக்கிய அரசியல் கட்சியினர், கூட்டணியில் இருப்பது தான் காரணம். அ.தி.மு.க., வலுவாக இல்லை. அதேபோல், அரசியல் வாழ்க்கைக்கு, விஜய் தகுதியான நபரல்ல. அவர் சிறந்த நடிகர். அதுதான் அவரது அடையாளம். அவரால் சரியான வழிநடத்தல் மற்றும் நல்ல நிர்வாகத்தை தர இயலாது. கரூர் சம்பவம் துவங்கி, எந்த பிரச்னையையும் அவர் முறையாக கையாளவில்லை.
இளம் தலைவர்கள் வரிசையில், அண்ணாமலைக்கு கட்டாயம் ஆதரவு தெரிவிப்போம். தமிழக பா.ஜ., தலைவராக இருந்த அவரை மாற்றி, மத்திய பா.ஜ., பெரிய தவறு செய்துவிட்டது. அவர் இருந்திருந்தால், அவருக்குத்தான் ஓட்டு போட்டுருப்பேன்.
எனவே, அவரை போல் படித்த தலைவர்கள் இடம்பெறும் கூட்டணி அல்லது சுயேச்சை கட்சிக்கு என் ஆதரவை தெரிவிப்பேன். முதல்முறை ஓட்டு போடுவோர், இதை பின்பற்றினால் நன்றாக இருக்கும். ஏனெனில், படித்த தலைவர்கள் தான் எதிர்கால தமிழகத்தை மாற்றுவர். நா.த.க.,வில் மட்டும் தான், படித்த இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
- ஜெயபிரியா, 22,
கல்லுாரி மாணவி, ராஜபாளையம்
அண்ணாமலை அவர்களுக்குத்தான் எனது ஒட்டு .. அண்ணாமலை அவர்களை போல திறமையும் அறிவும் பொது வாழ்வில் தூய்மையும் உள்ள மற்றொருவரை தமிழகத்தில் காட்டுங்கள் , அப்புறம் எனது முடிவை மாற்றிக் கொள்கிறேன்..
TVK ku podura ovvoru vote um DMK ku podurathukku samam
ஒருவருடைய வாக்கு இரகசியமானது. மற்றவர்களிடம் கேட்கவும் கூடாது பிறரிடம் சொல்லவும் கூடாது. புதிய ஆட்சியாளர்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்கலாம் . கடந்த ஆட்சியில் எது தேவையற்றது என்று கேட்கலாம். தேர்தலுக்கு முந்தய கருத்துக்கணிப்பு மற்றும் இத்தகைய செய்திகளை தடை செய்யவேண்டும்.
Mr Vijay not even paying his income tax properly and high court asked to pay the same to the incometax department, how new voters belive that he could give good goverrnance. Oru panai sattruku oru soru patham. The new votes whether aware of general knowledge from the current events.மேலும்
-
சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சிகள்
-
குமரகுரு கல்வி நிறுவனங்களில் ரூ.16 கோடி கல்வி உதவித்தொகை
-
மூலப்பொருள் விலை உயர்வால் செலவை சமாளிக்க முடியலை!அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்கள் தவிப்பு
-
ராம்குமாருக்கு 'மானுட ஐகான்' விருது
-
சங்கராபுரம் தொகுதியில் கூடுதலாக 40 ஓட்டுச்சாவடிகள்
-
இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு என்னிடம் பதில் இல்லை: பிரேமலதா