நுாற்பாலை கழிவுநீர் தொட்டியில் விழுந்து 2 குழந்தைகள் பலி
பள்ளிப்பாளையம்: நுாற்பாலை கழிவுநீர் தொட்டியில், வடமாநில தொழிலாளர்களின் இரு குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம், வெப்படை அடுத்த அம்மன் கோவில் பகுதியில், தனியார் நுாற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ்குமார், பிரதோஷ் ஆகியோர் வேலை செய்கின்றனர்.
இவர்கள், நுாற்பாலை வளாக கட்டடத்தில் குடும்பத்துடன வசித்தனர். நேற்று, மனோஜ்குமாரின் குழந்தை லோகன்குமார், 4, பிரதோஷின் குழந்தை ஹரிசங்கர், 3, ஆகிய இருவரும், மாலையில் விளையாடியபோது, அங்குள்ள கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்தனர்.
பெற்றோர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தொட்டியில் இறங்கி குழந்தைகளை மீட்டு, பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தைகள் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரிக் கின்றனர்.