வடமாநில வாலிபர் தற்கொலை
திருப்போரூர்:அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மசா அருள். 20, மனைவி மஜானி, 18, இவர்கள், ஓ.எம்.ஆர். சாலை கேளம்பாக்கம் அருகே ஏகாட்டூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்த நிலையில் தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு 12:30 மணிக்கு, மஜானி எழுந்து சமையல் அறைக்கு தண்ணீர் குடிக்க சென்றபோது, அங்கு துப்பட்டாவில் துாக்கில் தொங்கிய நிலையில் மசா அருள் இறந்து கிடந்தார்.
கேளம்பாக்கம் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement