திருப்போரூர் தாசில்தார் அலுவலகத்தில் எஸ்.பி., ஆய்வு

திருப்போரூர்;தமிழக சட்டசபை தேர்தல் ஏப்., 23 ல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கி, ஏப்.6ம் தேதி வரை நடக்கிறது.

திருப்போரூர் சட்டசபை தேர்தல் நடத்தும் அலுவலகமான தாசில்தார் அலுவலகத்தில், இன்று வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது.

இதையொட்டி நேற்று செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., அய்மன் ஜமால், ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தெரிவித்தார். ஆய்வின்போது மாமல்லபுரம் டி.எஸ்.பி. அறிவழகன், திருப்போரூர் சட்ட சபை தொகுதி தேர்தல் அலுவலர் விஜயகுமாரி, துணை தாசில்தார் முருகலட்சுமி, திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், காயார் இன்ஸ்பெக்டர் மருதப்பன், தனிப்பிரிவு போலீஸ் வெள்ளையத்தேவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisement