குருத்தோலை ஞாயிறு பண்டிகை பேரணி
மண்ணிவாக்கம்:குருத்தோலை ஞாயிறு பண்டிகையை முன்னிட்டு வண்டலுார் அடுத்த மண்ணிவாக்கம் சி.எஸ்.ஐ., கில்கால் ஆலயம் சார்பில் குருத்தோலை ஞாயிறு பண்டிகை முன்னிட்டு நேற்று உலக அமைதிக்கான பேரணி நடந்தது.
ஆலயத்தின் போதகர்கள் சாமுவேல் அன்பரசு, கவாஸ்கர் மேத்யூ ஆகியோர் தலைமை வகித்தனர். மண்ணிவாக்கம் ஊராட்சி தலைவர் கெஜலட்சுமி, கொடியசைத்து, பேரணியை தொடங்கி வைத்தார். முன்னதாக வெள்ளை நிற சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன.
* திருப்போரூர் அடுத்த தண்டலம் ஓ.எம்.ஆர், சாலையில் குருதேவா மழலையர் பள்ளியின் 21ம் ஆண்டு விழா நடந்தது.
இதில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தனஞ்செழியன் தலைமை வகித்தார். பள்ளி துணை முதல்வர் சித்ரா வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி தொகுத்து வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக பதிவுகள் அறக்கட்டளை நிறுவனர் சமரன், முனைவர் செந்தில்குமார், கவிஞர்கள் பன்னீர்செல்வம், ஆதிபகலன், சுபத்ரா, வள்ளலார் மன்ற நிர்வாகி மணி, சமூக செயற்பாட்டாளர்கள் பாஸ்கரன், ராமச்சந்திரன், பாரத் பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின் மாணவர்களுக்கு பரிசு சான்றிதழ்கள் வழங்கினர்.
பள்ளியின் தாளாளர் கவிஞர் உதயா ஆதிமூலம் சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
முன்னதாக, மாணவ, மாணவியர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். பள்ளி ஆசிரியை மகாலட்சுமி நன்றி கூறினார்.