ஒரு பைசா கூட பயன்படுத்தாத கேரளா; பார்லியில் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
புதுடில்லி: மத்திய அரசின் ரூ.312 கோடி பேரிடர் நிதியை கேரள அரசு இதுவரை பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளதாக பார்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகம், கேரளா போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக லோக்சபாவில் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டினார். அரசு திட்டமிட்டே நிபந்தனைகள் மற்றும் தாமதங்கள் மூலம் நிதியை முடக்குகிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது; எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், குறிப்பாக கேரளா, மத்திய அரசு ஒதுக்கிய நிதியைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தேசியப் பேரிடர் மீட்பு நிதியின் கீழ் ரூ. 311.95 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அரசு நிதி ஒதுக்கியும், கேரள அரசு அந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக நிலச்சரிவில் சிக்கி பாதிப்புக்குள்ளான வயநாடு பகுதியில் மீட்பு நடவடிக்கைகளுக்காக ரூ. 72 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த நிதியைப் பயன்படுத்தவே இல்லை, என்று அவர் தெரிவித்தார்.
அது சரி பிரதமர் இன்டெர்ன்ஷிப் திட்டம் என்ன ஆனது அம்மையாரே ? வழக்கம் போல நேரு தான் வேலை வாய்ப்பின்மைகு காரணமா ?
பேரிடர் இழப்பு கேட்டது எவ்வளவு , கொடுத்தது கம்மி, யானை பசிக்கு சோலா பொறி . பிற மாநிலங்ககு அல்லி கொடுக்க முடியும்
உங்கள் நிதியை பயன்படுத்தாமலே 10 வருடம் சிறப்பான ஆட்சி
ஊழல் செய்வதற்காகவே - BUDGET நிதிகளை பயன்படுத்தி பழக்கம் ஆகிவிட்டது எனக்கு.
பழைய ஆட்சிகள் போல் இல்லாமல் - இந்த ஆட்சியில் சிறு ஊழல் செய்தாலும் - மோப்பம் பிடித்து உடனே ED ஐ அனுப்பிவிடுகிறீர்கள்.
எனக்கு ஒரு பைசா லாபம் இல்லாதபோது நான் ஏன் நிதியை செலவழித்து - என் மண்டையை உடைத்துக்கொள்ளவேண்டும் - என்று கூறுகிறார்கள் மாநில முதல்வர்கள்
ஒரு பைசா கூட கொடுக்காத நீங்க பேசலாமோ?
பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு பற்றி சில மாநிலங்கள் மற்றும் நீதிமன்றங்கள் அதிகம் பொருட்படுத்துவது இல்லை. 312 கோடி நிதி கேரளா மாநிலத்தில் கிடப்பில் என்றால், மத்திய அரசு வேலை குற்றம் சாட்ட மட்டும் தான். நடவடிக்கை எடுத்தால் கூட்டாட்சி தத்துவம் நீதிமன்றத்தில் விசாரணையில் எழுந்து நிற்கும். மாநிலங்களை நிர்வகிக்க மத்திய அரசுக்கு வழியே தெரியாதா? கர்நாடகா நீதிமன்றம் முதல்வர் அலுவலகம் மாநில நிர்வாகத்தில் நேரடியாக அதிகாரம் செலுத்த கூடாது என்கிறது. 100 சதவீதம் சரியான தீர்வு. இதனை உடைக்க தான் சாசனத்திற்கு எதிராக ஜீரோ டிகிரி திராவிட குழு மாநில சுயாட்சி என்று கூவியது.
நிதி மேலாண்மை மற்றும் பயன்பாடு தமிழகத்தில் மட்டும் தான் சிறப்பாக உள்ளது.
அளவு கடந்த சொத்தை மேலும் அதிகரிக்க நிதியை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. பற்றாமல் 3 டு 4 லட்சம் கோடி கடன் வேறு.
பயன் நாடு பாதி நிதி, நிதி குடும்பத்திற்கு போகிறது. எந்த எந்த வழியில் பணத்தை ஆட்டைய போடலாம் கட்சி நிர்வாகிகளுக்கு எப்படி ஒப்பந்தம் டெண்டர் எல்லாம் கொடுக்கலாம்.
5 வருடத்தில் 5 பட்சம் கோடி கடன் இந்த நிதிஆளுமை விஷயத்தில் தமிழ்நாட்டுடன் போட்டிபோடமுடியாமல் உலகிலுள்ள பல நாடுகள் கூட விழி பிதிங்கி நிற்கின்றன. ஏனெனில் உலகத்தில் ஒரே ஒரு ஜெயரஞ்சன்தான் அவதரித்திருக்கிறார். அவரும் நம்மஆளுமேலும்
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
-
நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி; வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு
-
ஆண்டிப்பட்டியில் 3ம் முறையாக அண்ணன், தம்பி நேருக்கு நேர் மோதல்
-
திருச்சி சமயபுரம் கோவிலில் மேற்கூரை இடிந்து பெண் பக்தர் பலி
-
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியை எதிர்த்து களமிறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார்?