ஆண்டிப்பட்டியில் 3ம் முறையாக அண்ணன், தம்பி நேருக்கு நேர் மோதல்
நமது சிறப்பு நிருபர்
ஆண்டிபட்டி தொகுதியில் தி.மு.க., சார்பில் அண்ணனும் அ.தி.மு.க., சார்பில் தம்பியும் 3ம் முறையாக வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.
தேனி மாவட்டத்தின் விஐபி தொகுதி ஆண்டிபட்டி. எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் போட்டியிட்டு வென்றதால் நாடு முழுவதும் அறியப்பட்ட தொகுதி. இந்த தொகுதியில் 2019ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் மகாராஜன், அ.தி.மு.க., சார்பில் அவரது தம்பி லோகிராஜன் போட்டியிட்டதில் மகாராஜன் வெற்றி பெற்றார்.
2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் மீண்டும் அண்ணன் தம்பிகளே வேட்பாளராக களம் இறங்கினர். இந்த தேர்தலிலும் மகாராஜன் (தி.மு.க.,) வெற்றி பெற்றார்.
குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் லோகிராஜன் இருமுறை வெற்றி வாய்ப்பை இழந்தாலும், தொகுதி மற்றும் கட்சி மேலிடத்தில் தனக்கான செல்வாக்கை நிலை நிறுத்தி வந்தார். இதனால் ஆண்டிபட்டி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் மூன்றாவது முறையாக போட்டிடும் வாய்ப்பு லோகிராஜனுக்கு கிடைத்துள்ளது.
தொடர்ந்து இரு முறை மகாராஜன் வெற்றி பெற்ற நிலையில், வரும் தேர்தலில் 3வது முறையாக, தி.மு.க., வேட்பாளராக மகாராஜன் போட்டியிடுகிறார்.
யார் ஜெயிச்சாலும் நாட்டுக்கு பைசா பிரயோஜனமில்லை
வெட்கம் கெட்ட .... மகன்கள்
ஒரு தாய் வயிற்றில் பிறந்த உடன் பிறப்பு சகோதரர்களை சண்டை மூட்டி கொம்பு சீவிவிடுவதே இந்த திராவிட காட்சிகளின் கோட்பாடு.
வாலி சுக்ரீவன் என்று கதை படித்ததல்லையா? அதை வெச்சி கோயில் கட்டி அசிங்கமா அரசியல் பண்ணி விட்டு இப்போ எதுக்கு கமறல்?
மொத்தத்தில் அந்த குடும்பத்தில் இருந்து ஒருத்தர் எப்போதும் பதவியில் இருந்துகொண்டே இருப்பர்.
இந்த முறை யோகிராஜனுக்கு யோகம் வரலாம்?
அது லோகி ராஜன்.
பங்காளி பிரச்சனை இருவரும் செலவு செய்யாமல் ஒற்றுமையாக ஒரே வண்டியில் ஒரே மேடையில் பேச வேண்டும் .ஓட்டு போடும்போது மக்கள் முடிவு எடுப்பார்கள் .வீண் செலவு செய்ய வேண்டாம்.மேலும்
-
அமோக ஓட்டு வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல்; ஸ்டாலின், விஜய் வேட்பு மனு தாக்கல்
-
வேட்பாளர் தேர்வில் தேசிய கட்சிகள் திணறுவது ஏன்?
-
தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைவு
-
பிரதமரை வரவேற்கும் குழுவில் அண்ணாமலை பெயர் இருந்ததா?
-
பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு; தர்மபுரியில் சவுமியா அன்புமணி போட்டி