நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி; வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு

55

சென்னை: தேர்தலில் இருமுனைப்போட்டி தான். நமக்கும், ஸ்டாலின் சார் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி என தவெக தலைவரும், நடிகருமான விஜய் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேசுகையில் தெரிவித்தார்.


சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த தவெக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் விஜய் பேசியதாவது: இந்த கூட்டத்தை வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் என்று சொன்னார்கள். வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் அல்ல; மக்களுக்கான காப்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம். நமது கட்சிக்காரர்களுக்கு தேர்தலை எதிர்க்கொண்ட அனுபவம் இல்லை என்று சொல்வார்கள்.


நமது வேட்பாளர்கள் எல்லோரும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இருக்கிறார்கள். ஒரு எம்எல்ஏ எப்படி இருக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன். சும்மா அனுபவத்தை வைத்து கொண்டு கொள்ளை அடிப்பவர்களாக எம்எல்ஏ இருக்க கூடாது. கேள்வி கேட்கும் ரிப்போர்டர்களை தாக்குகிறவர்களாக இருக்க கூடாது. திமுகவில் இருந்த எம்எல்ஏ மீது கொள்ளை அடித்த வழக்கு இருக்கிறது.



திருட்டு வழக்கு




போதைப்பொருள் கடத்தல் வழக்கு இருக்கிறது. திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று வந்தவர் எல்லாம் ஒருத்தர் இருக்கிறார். நீங்கள் கூட யாரு அந்த எம்எல்ஏ யார் என்று யோசிக்கலாம். அந்த திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று வந்தவரை இந்த தேர்தலில் யாருக்கு எதிராக திமுகவினர் நிற்க வைத்தார்கள் தெரியுமா. இன்றைக்கு அவர்கள் கூட்டணியில் மூச்சு 300 முறை முட்டுக்கொடுக்கும் தலைவருக்கு எதிராக நிற்க வைத்தார்கள். மரியாதை நிமித்தமாக அந்த தலைவர் பெயரை சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன்.



உங்களுடைய பொறுப்பு




எம்எல்ஏக்கள் எல்லோரும் எல்லை காப்பாளராக இருக்க வேண்டும். களத்தில் மக்களோடு மக்களாக இருப்பவர்களை தான் தேர்வு செய்து இருக்கிறேன். நானே பார்த்து பார்த்து வேட்பாளர்களை தேர்வு செய்து இருக்கிறேன். மக்களே அவர்களை எம்எல்ஏ ஆக்குவது உங்களுடைய பொறுப்பு. விஜய்க்கு கூட்டம் வந்தால் அது எல்லாம் ஓட்டாக மாறிவிடுமா என்று வன்மத்தில் கேட்பவர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன்.


@quote@இந்த தேர்தல் இருமுனைப்போட்டி தான். மக்கள் கூட்டணியான நமக்கும், ஸ்டாலின் சார் கூட்டணிக்கு தான். அது என்ன ஸ்டாலின் சார் கூட்டணி, மக்கள் நலன் கூட்டணியா? மொத்தம் package அங்கே தானே இருக்கிறது. quote
ரிசல்ட் தெரிந்த காரணத்தினால் மொத்தமாக மக்கள் நல கூட்டணியாக மாற்றி கொண்டாரா என்று தெரியவில்லை. உடைந்த கண்ணாடியை ஒட்ட வைத்த மாதிரி, கிழிந்த துணியை தைத்து வைத்த மாதரி ஒட்டு போட்ட கூட்டணி. உங்களது ஓட்டை சிந்தாமல் சிதறாமல் தவெக வேட்பாளர்களுக்கும், தவெகவின் விசில் சின்னத்திற்கும் தயவு செய்து ஓட்டு போட்டுவிடுங்கள்.



ஏமாற்று பேர் வழி




இந்த தேர்தல் பாமரர்களுக்கும் அதிகார மமதை கொண்ட ஒரு குடும்பத்திற்கு சேவை செய்யும் அடிமைகளுக்கும் இடையே நடக்கிற தேர்தல்; ஏழைகளுக்கும், ஏமாற்று பேர் வழிகளுக்கும் இடையே நடக்கிற தேர்தல். உழைக்கிற மக்களுக்கும் உழைப்பை சுரண்டுபவர்களுக்கும் இடையே நடக்கிற தேர்தல். நல்லவர்களுக்கும் நாட்டை நாசப்படுத்துபவர்களுக்கும் இடையே நடக்கிற தேர்தல்; மக்கள் பணத்தை சுரண்டும் ஊழல், லஞ்சத்தை ஒழிக்க வந்தவர்களுக்கும், ஊழலில் ஊறிபோனவர்களுக்கும் இடையே நடக்கிற தேர்தல். மக்கள் சக்திக்கும், மக்கள் விரோத சக்திக்கும் இடையே நடக்கிற தேர்தல்.


தவெக vs திமுக




சுருக்கமாக தவெகவும், திமுகவுக்கு இடையே நடக்கிறது தேர்தல். விஜய்க்கும், ஸ்டாலின் சாருக்கும் இடையே நடக்கும் ஆரோக்கியமான, ஜனநாயக போட்டிக்கான தேர்தல். தவெக வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுவது மன்னராட்சியில் இருந்து மக்களாட்சியை கொண்டு வருவதற்கு ஓட்டு போடுகிற மாதிரி.


நான் வேற, வேட்பாளர்கள் வேற அல்ல. உங்கள் இதயத்தில் விஜய், இல்லந்தோறும் எம்எல்ஏ என்று சொல்லலாம். நமது வேட்பாளர்கள் தான் எம்எல்ஏ ஆனார்கள் என்று மே 4ம் தேதி உலக சாதனை செய்தியாக இருக்க வேண்டும். விஜய்க்கு இழைப்படும் அநீதிக்காக, நீதியை வென்று எடுக்க, தமிழகத்தின் எதிர்காலத்திற்காக எங்கள் எல்லோருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். இவ்வாறு விஜய் பேசினார்.



@block_P@

விஜய் அறிவித்த வாக்குறுதிகள்

* போதை பொருள் உள்வரவு தடுப்பு மற்றும் புழக்கத்திற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். போதை பொருள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரியில் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம் நிறுவப்படும்.


* கல்விக்கு வறுமை தடையாக இருக்கக்கூடாது என்பதால், இளைஞர்கள் கல்வியை உறுதி செய்ய 12 ம் வகுப்பிற்கு பின் ரூ. 20 லட்சம் வரை இலவச லோன் வழங்கப்படும்.


* அரசு வேலை வழங்க அனைத்து ஆள் சேர்ப்பு அட்டவணை தயாரிக்கப்படும்.


* வேலை வாய்ப்பு தாமதம் ஏற்பட்டால் மாதம்தோறும் பட்டதாரிகளுக்கு ரூ. 4 ஆயிரமும், டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ. 2.500 ஆயிரம் வழங்கப்படும்.


* ஆண்டுதோறும் 5 லட்சம் இண்டர்ன்ஷிப் பயிற்சியை வழங்க, பட்டதாரிகளுக்கு மாதம் 10000 ரூபாயும் ஐ.டி படித்தவர்களுக்கு 8000 ரூபாய் சம்பளமாக அரசே வழங்கும்.


* நேர்மையான தொழில்முனைவோரை உருவாக்கும் வகையில் 25 லட்ச ரூபாய் அளவுக்கு பிணையில்லா கடன் வழங்கப்படும்.


* தமிழர்களுக்கே வேலை என்பதை உறுதிச்செய்ய 'நமது ஊரில் நமக்கே வேலைவாய்ப்பு திட்டம்' உருவாக்கப்படும். தனியார் நிறுவனங்களில் 75% தமிழர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு மாநில ஜி.எஸ்.டியிம் 2.5% மானியம் வழங்கப்படும். மின் கட்டணங்களில் 5% மானியம் வழங்கப்படும்.block_P




@block_B@

உறுதிமொழி

''மக்களுக்காக மக்கள் பணிக்காக மட்டுமே இந்த தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். நான் ஜெயித்து வந்த பிறகு மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட தொட மாட்டேன். ஊழல் கறை படியவே விட மாட்டேன். பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன்.


போதையில்லா தமிழகத்தை உருவாக்குவேன். சட்டம் ஒழுங்கை சரி செய்ய துணை நிற்பேன். ஒரு நாளும் மக்கள் விரோத செயலில் ஈடுபட மாட்டேன் என விஜய் கூறியதை நெஞ்சில் கை வைத்து தவெக நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.block_B

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சி தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

லைவ் வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement