முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியை எதிர்த்து களமிறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார்?
நமது நிருபர்
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் சந்தானகிருஷ்ணனும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதியை எதிர்த்து ஆதிராஜாராமும் போட்டியிடுகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டிலை வெளியிட்டு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்தது.
சட்டசபை தேர்தலில், தி.மு.க., போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். இதன் மூலம் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி களம் காண்பது உறுதியானது.
தற்போது அதிமுக சார்பில் போட்டியிடும் 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டார். இந்த பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி வேட்பாளர், துணை முதல்வர் உதயநிதி போட்டியிடும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் விபரம் தெரியவந்தது. அதன் விபரம் பின்வருமாறு:
கொளத்தூர்
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் சந்தானகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
சேப்பாக்கம்
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதியை எதிர்த்து, அதிமுக சார்பில் ஆதிராஜாராம் போட்டியிடுகிறார். தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளராக ஆதிராஜாராம் உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் முதல்வர், துணை முதல்வரை எதிர்த்து போட்டியிடுவது யார் என்ற விபரம் வெளியானதால், அரசியல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. இனி தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் முழுவீச்சில் இறங்கிவிடும்.
வாசகர் கருத்து (11)
V RAMASWAMY - Bengaluru,இந்தியா
29 மார்,2026 - 19:46 Report Abuse
சமாதியை வளம் வருதல், அதில் லிஸ்டை வைத்து வேண்டுதல் இவையெல்லாம் எந்த மதத்தை அல்லது எந்த நம்பிக்கையை சார்ந்ததுங்கோ ? 0
0
Reply
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
29 மார்,2026 - 15:19 Report Abuse
தமிழா உன்னை கொள்ளை அடிக்கும் இந்த கோவால் புற திருட்டு திராவிட ஒன்கொள் குடும்பத்தை அடித்து விரட்டுவோம்... 0
0
Reply
பாலாஜி - ,
29 மார்,2026 - 13:00 Report Abuse
சந்தானகிருஷ்ணனை டெபாசிட் இழக்கும் பலிகடாவாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்துஇருக்கிறான். 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
29 மார்,2026 - 11:58 Report Abuse
ADMK DMK ஸ்டாலினை எதிர்த்து டம்மி வேட்பாளர், எடப்பாடியை எதிர்த்தும் DMK பேர் தெரியாத வேட்பாளர் என்னவோ உள்குத்து இருக்குமோ 0
0
Reply
Saran - pondichery,இந்தியா
29 மார்,2026 - 11:35 Report Abuse
Both are waste to TN 0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
29 மார்,2026 - 10:54 Report Abuse
அவர் தயார்தான். ஆனா வூட்டு அம்மணி அவரு கையை கட்டிப்போட்டு இருக்காங்களே . அவரு வேஷ்டி கட்டினாக்கூட கட்சி ஜெயிக்காதுன்னுதான் அவரு எப்போவும் பிரிட்டிஷ் மாடலில் பேண்ட் போட்டு இருக்காராம். அந்த அளவுக்கு அவருக்கு பகுத்தறிவாம். 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
29 மார்,2026 - 10:35 Report Abuse
இன்று மாலை 6:00 மணிக்கு மேல் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் - திரு.ஸ்டாலின். நீங்கதான் பகுத்தறிவு பகலவன் ஆச்சே.. ஞாயிற்று கிழமை சரியா 4.30 மணிக்கு ராகு காலத்துல தேர்தல் அறிக்கையை வெளியிட வேண்டியது தானே ???? 0
0
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS,இந்தியா
29 மார்,2026 - 11:22Report Abuse
சனாதன முறைப்படி பூஜை புனஸ்காரங்கள் செய்து ஆசிர்வாதத்துடன் அரங்கேறும் வேட்பாளர் பட்டியல்? கொத்தடிமைக்களுக்கு மட்டும் பகுத்தறிவு அறிவுரைகள் வழங்குவார்கள். எத்தனையோ கயவானிகள் படையெடுத்து வந்தார்கள், யாராலும் சனாதனத்தை அசைக்க முடியவில்லை, முடியாது... 0
0
Arjun - ,இந்தியா
29 மார்,2026 - 15:27Report Abuse
அது மக்களை ஏமாற்றம்தான் மற்றபடி அம்மணி சொல்லுவதை கேட்டுதான். 0
0
Reply
Rajah - Colombo,இந்தியா
29 மார்,2026 - 09:52 Report Abuse
பல கட்சிகளை இனைத்து ஒரே குறிக்கோளோடு திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்திருக்கின்றார்கள். ஆனால் மறைமுகமுகமாக முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும் அமைத்த கூட்டணிதான் உண்மையான குறிக்கோளோடு அமைக்கப் பட்டிருக்கின்றது. இதை அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்தே அறிந்து கொள்ளலாம். இருவரும் கலந்தாலோசிக்காமல் இதை செய்திருக்க முடியாது. அறிந்தே தேசியக் கட்சிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. விஜய்யை இருவரும் சேர்ந்து திட்டமிட்டு முடக்கியிருக்கின்றார்கள். திராவிடக் கட்சிகளான நாம் இருவரும்தான் தமிழகத்தை கொள்ளையடிக்க வேண்டும் வேறுயாரும் அதில் நுளையக்கூடாது என்ற உண்மையான இலட்சியம், கொள்கை, குறிக்கோள் இந்த இருவரின் மறைமுகக் கூட்டணி நமக்கு புலப்படுத்திடுகின்றது. வாழ்க திராவிடம். 0
0
Shekar - ,
29 மார்,2026 - 11:07Report Abuse
விஜய்யை யாரும் முடக்கவில்லை. விஜய் ஒரு சொகுசு பேர்வழி. 27ம் தேதி 5 தொகுதி பிரச்சாரம் அறிவித்தார். ஒரு தொகுதிக்கு அனுமதி கொடுக்க வில்லை. சரி மற்ற 4 தொகுதியில் பிரச்சாரத்தை முன்னெடுக்க முடியும் ஆனால் செய்யவில்லை. ஐய்யோ என்ன அடிக்கிறாங்க அப்படின்னு தேர்தல் கமிஷனரிடம் போனார். சுவிதா ஆப்பில் மாற்று இடம் இவரே தேர்ந்தெடுத்து ஆன்லைன் அனுமதி பெற்றிருக்க முடியும். நொண்டி குதிரைக்கு சருக் என்ற சப்தம் கேட்டு ஓடாமல் அடம் பிடித்தது போல ஏசி ரூமில் முடங்கிகொண்டார் 0
0
Reply
மேலும்
-
தமிழ்நாடு வழக்கறிஞர் சங்க தேர்தல் ஓட்டுப்பதிவு
-
பங்குனி உத்திரத்தில் வேட்பு மனு :த.வெ.க., வேட்பாளர்கள் முடிவு
-
வெளிமாநில மதுபாட்டில் கடத்திய நபர் கைது
-
தேர்தல் அறிவிப்புக்கு பின் முதல்முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி; ஏப்.4ல் சென்னையில் பிரசாரம்
-
மேல்சித்தாமூர் பார்சுவநாதர் கோவில் தேர் திருவிழா
-
சென்னை நெடுஞ்சாலையில் தி.மு.க., நிர்வாகி மறியல்
Advertisement
Advertisement