வேட்பாளரை அறிவித்த பிறகு நேமகவுடன் தவெக கூட்டணி; 2 தொகுதிகள் ஒதுக்கீடு
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தவெகவுடன் நேயம் மக்கள் கழகம் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதிமுக மற்றும் திமுக கூட்டணிகள் இடையேயான தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை கடும் இழுபறிக்கு பிறகு இறுதியானது. இந்த சூழலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து களமிறங்க முடிவு செய்து, நேற்று 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
இதையடுத்து, வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு ஆயத்தமாகி வந்த சூழலில், தவெகவுடன் நேருவின் தலைமையிலான நேயம் மக்கள் கழகம் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கட்சிக்கு உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே, உருளையன்பேட்டையில் மரிய பிரான்சிஸூம், தட்டாஞ்சாவடியில் பன்னீர்செல்வமும் தவெக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
இதில் பிரச்சினை ஒன்றும் இல்லையே. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இரண்டு வேட்பாளர்களும் நேயம் மக்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடலாம்மேலும்
-
சட்டம் ஒழுங்கு சரியில்லை என வாட்ஸாப்பில் அவதுாறு; கனிமொழி புகார்
-
நவீன வசதியுடன் கூடிய வாகனம் :தீயணைப்பு துறையினர் மகிழ்ச்சி
-
மானாமதுரையில் ஏப். 21ல் சித்திரை விழா துவக்கம்: வைகை சுத்தப்படுத்தப்படுமா:பக்தர்கள் எதிர்பார்ப்பு
-
திருப்புத்துார் தொகுதி மக்களின் தேவைகள் எதிர்பார்ப்பு வேட்பாளர்களின் வாக்குறுதிகளாக மாறுமா
-
காங்., நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு
-
பாக்., பல துண்டுகளாக சிதறும்: அமைச்சர் ராஜ்நாத் எச்சரிக்கை