கிரீன் பாரடைஸ் பள்ளி ஆண்டு விழா

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிரீன் பாரடைஸ் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளி 8வது ஆண்டு விழா நடந்தது.

பள்ளியின் நிறுவனர் சண்முகம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பள்ளியின் முதன்மை இயக்குனர் வனஜா குத்துவிளக்கேற்றினார். சிறப்பு விருந்தினர் முன்னாள் எம்.எல்.ஏ., பழ கருப்பையா பங்கேற்று, நுாறு சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கும், ஒவ்வொரு வகுப்பிலும் முதல் 3 மதிப்பெண் பெற்றவர்களுக்கும் விருது வழங்கி சிறப்புரையாற்றினார்.

பள்ளியின் செயலாளர் சந்தோஷ், நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன் ஆகியோர் விருந்தினர்களை கவுரவித்தனர். பள்ளி முதல்வர் சங்கீதா ஆண்டு அறிக்கை வாசித்தார்.

விழாவையொட்டி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தமிழ் ஆசிரியை சரஸ்வதி நன்றி கூறினார்.

Advertisement