பெரம்பூர் தொகுதியில் விஜய் நாளை பிரசாரம்

சென்னை: சென்னை, பெரம்பூர் தொகுதியில் போட்டி யிடவுள்ள த.வெ.க., தலைவர் விஜய், தன் தேர்தல் பிரசாரத்தை, நாளை துவங்கவுள்ளார்.

சட்டசபை தேர்தலில், த.வெ.க., சார்பில், 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் தயாராகி உள்ளது. கட்சி தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

அத்தொகுதியில், கொடுங்கையூர் அடுத்த கண்ணதாசன் நகரில், கவுன்சிலர் ஒருவரிடம் இருந்து, த.வெ.க., நிர்வாகி வாயிலாக, விஜய்க்காக ஒரு பங்களா விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. இங்கு தங்கி தேர்தல் பணிகளை, விஜய் கவனிக்கவுள்ளார். இந்நிலையில், தன் தேர்தல் பிரசாரத்தை, பெரம்பூரில் விஜய் நாளை துவங்கவுள்ளார்; வரும் 26 வரை பிரசாரம் மேற்கொள்கிறார். முன்னதாக, நாளை காலை, அந்த பங்களாவில் பூஜை போடப்படுகிறது.

Advertisement