காங்., செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் அழைப்பு

செஞ்சி: செஞ்சியில் காங்., செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட தலைவர் ரங்க பூபதி அறிக்கை:

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., செயல் வீரர்கள் கூட்டம் இன்று காலை 10:00 மணிக்கு எனது தலைமையில் செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

சிறப்பு விருந்தினராக தி.மு.க., மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., பங்கேற்கிறார். நிர்வாகிகள் வசம் ஓட்டுச்சாவடி பதிவேடுகள் வழங்க இருப்பதால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement