பாஜ ஜாடிக்கு ஏற்ற மூடி அதிமுக; முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
சென்னை: ''பாஜ ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்னையை மறந்தும் பேசமாட்டோம் எனத் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டுள்ள அதிமுகவோ, மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள்'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கோவிட் காலத்தைப் போல என பிரதமர் மோடி பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தீவிர நடவடிக்கைகள் மூலம் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய மத்திய பாஜ அரசு இதில் இருந்து செய்திகளைத் திசைதிருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை script-ஐத் தற்போது கையிலெடுத்துள்ளது.
பாஜ ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்னையை மறந்தும் பேசமாட்டோம் எனத் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டுள்ள அதிமுகவோ, மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள்.
சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது? மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. "இத்தனைக்கும் பொறுப்பான ஒன்றிய பா.ஜ.க. அரசு என்ன செய்கிறது?" என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
என்னவாம் பாலிடால்
ஏப்ரல் 4 ட்ராமா முடிவுக்கு வரும் பிறகு தீகாரா, புழலா தெரியும்.
இப்படியும் சொல்லலாம் துரோகிகள் துரோகிகளுடன்தான் கூட்டு சேருவார்கள் தமிழினத்திற்கு துரோகம் செய்த காங்கிரஸ் தமிழினத்திற்கு துரோகம் செய்த திமுகவுடன் தான் எப்போதும் கூட்டணியில் இருக்கும். பிஜேபி கூட இருக்க வாய்ப்பில்ல ராஜா
காங்கிரஸின் காலுக்கேற்ற செருப்பு திமுக மாதிரி. திமுகவின் அளவிற்கு ஏற்ப ஜட்டி கம்யூனிஸ்ட் மாதிரி
will not understand Modi's speech.
அந்த ஜாடிககுள்ள இருந்து தான் இந்த கட்டுமரம் குடும்பத்தில் மத்தியால் ஆட்சியில் பங்கு போட்டு இலாகா இல்லாத அமைச்சராக இருந்த கேபில் திருடன் அப்பா மருத்துவ சிகிச்சை நடந்தது.
மூடி ஜாடி உவமை வெய்யில் தாக்கத்தின் அடையாளமான பிதற்றல் ,
ஜாடிக்கேத்த மூடி இது பழசு. தலைக்கு ஏத்த ... .இது புது மொழி
நான் கேள்வி பட்டேன் தேர்தலுக்கு அப்பரம் திமுக பாஜகாவோடு கூட்டணி
ஸ்டாலின் அவர்களுக்கு பாஜக கட்சியை நினைத்து தூக்கமே வரவில்லையாம்.
பதவியை காப்பாற்ற முடியாமல் தவிக்கிறார்.
டிரம்ப்பிடம் உதவி கேட்டு உதயாவை அனுப்பலாமா என்று எண்ணுகிறார்.மேலும்
-
தமிழ்நாடு வழக்கறிஞர் சங்க தேர்தல் ஓட்டுப்பதிவு
-
பங்குனி உத்திரத்தில் வேட்பு மனு :த.வெ.க., வேட்பாளர்கள் முடிவு
-
வெளிமாநில மதுபாட்டில் கடத்திய நபர் கைது
-
தேர்தல் அறிவிப்புக்கு பின் முதல்முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி; ஏப்.4ல் சென்னையில் பிரசாரம்
-
மேல்சித்தாமூர் பார்சுவநாதர் கோவில் தேர் திருவிழா
-
சென்னை நெடுஞ்சாலையில் தி.மு.க., நிர்வாகி மறியல்