மேற்காசிய நாடுகளுக்கு மேலும் படைகளை அனுப்பும் அதிபர் டிரம்ப்
டெஹ்ரான்: போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில், மேற்காசிய நாடுகளுக்கு தொடர்ந்து அமெரிக்க படையினர் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் கிட்டத்தட்ட ஒரு மாதத்தை நெருங்கி விட்டது. ஈரான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மேற்காசிய நாடுகளுக்கு சுமார் 1,000 ராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்பி வைக்க உள்ளது. இதனிடையே, போர் நிறுத்தம் தொடர்பாக 15 அம்சங்களுடன் அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் அடங்கிய குழு, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தவே ஈரான் விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கச் சிறப்புத் தூதர்களான ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் குஷ்னரை விட, ஜேடி வான்ஸ் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக ஈரான் நம்புகிறது.
இதனிடையே, ஹார்முஸ் ஜலசந்தியை, ஈரான் தனது நிபந்தனைகளுக்கு உட்பட்டு பயன்படுத்த அனுமதிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஈரான் அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் தங்கள் நாட்டுக்கு எதிராகச் செயல்படாத நாடுகளுக்கு சொந்தமான கப்பல்களை மட்டும், இந்தக் கடல்வழியை பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சு வார்த்தையில் ஈரானை சில விஷயத்துல படிய வைக்க இது ஒரு வியூகம். இரண்டு தரப்பும் அடி வாங்கியிருக்கு, வலிக்காத மாதிரி கெத்து காட்டி சில காரியங்களை சாதிக்கணும், அவ்வளவு தான்.
சும்மாவே இருக்கமாட்டார் டிரம்ப். அந்த கமலா ஹரிஸ் எவ்வளவோ மேல்...
ஈரானுடன் அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தும்போதே ஈரான் ஏவிய ஏவுகணைகளால் ஐந்து அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் இதே போல் அமெரிக்க ராணுவத்தினர் தரை மார்க்கமாக ஈரானுடன் போரிட்டால் ஆயிரக் கணக்கான அமெரிக்க வீரர்கள் கொல்லப் படுவார்கள் அப்போதுதான் மனித உயிர்கள் அவ்வளவு மலிவானது அல்ல என்கிற உண்மை அமெரிக்காவிற்கு தெரியவரும். அமெரிக்காவின் தரைவழிப் படையெடுப்பு குறித்து ஈரான் கூறியிருப்பதாவது,பல ஆண்டுகளாக அமெரிக்கர்களின் வருகையை நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். அமெரிக்க வீரர்களுக்கு எங்களிடம் ஒரே ஒரு செய்தி மட்டுமே உள்ளது எங்களை நெருங்கி வாருங்கள் அதுவென்று உங்களுக்கு சொல்கிறோம் என்பதுதான்! ஆனால் அமெரிக்கா அப்படி ஒரு முடிவெடுத்தால் அவர்களுடைய இராணுவ வீரர்களின் இறப்பு எண்ணிக்கை பயங்கரமாக இருக்கும். ஈரான் நாடு ஈராக் போன்று சமவெளி அல்ல அங்கே பட மலைகளும், குகைகளும், பள்ளத்தாக்குகளும் உள்ளன. எனவே தரைவழிப் போரில் அமெரிக்கா அவ்வளவு சுலபமாக ஈரானை வெற்றி கொள்ள முடியாது என்பதே எதார்த்தம். வியட்நாம் போரில் அமெரிக்கா 58,000 இராணுவ வீரர்களை பலி கொடுத்து தோற்றுப் போய் ஓடிவந்த வரலாற்றை அமெரிக்கா மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்ப்பது நல்லது!
அடேங்கப்பா ?? சுப்பு ??
ட்ரம்போட கர்வம் லட்சக்கணக்கான அமெரிக்க வீரர்களின் உயிரையும் அமெரிக்க மக்களின் வாழ்வாதாரத்தையையும் விட மேலானது??
ட்ரம்ப் நிச்சயம் அண்டை நாட்டு துரோகிகளை பயன்படுத்தி எப்படியும் ஈரானை வீழ்த்தவே முனைவார் பாகிஸ்தானுக்கு நல்ல சந்தர்ப்பம் இதை பயன்படுத்தி ஈரானுக்கு துரோகம் செய்து அமெரிக்க அதிபரின் உற்ற நண்பராவார்கள்.ஆனால் வரலாறு துரோகிகளை மறக்காது மன்னிக்காது.
அடேங்கப்பா ?? சுப்பு ??
ட்ரம்போட கர்வம் லட்சக்கணக்கான அமெரிக்க வீரர்களின் உயிரையும் அமெரிக்க மக்களின் வாழ்வாதாரத்தையையும் விட மேலானது??
ட்ரம்ப் நிச்சயம் அண்டை நாட்டு துரோகிகளை பயன்படுத்தி எப்படியும் ஈரானை வீழ்த்தவே முனைவார் பாகிஸ்தானுக்கு நல்ல சந்தர்ப்பம் இதை பயன்படுத்தி ஈரானுக்கு துரோகம் செய்து அமெரிக்க அதிபரின் உற்ற நண்பராவார்கள்.ஆனால் வரலாறு துரோகிகளை மறக்காது மன்னிக்காது.மேலும்
-
புதுச்சேரியில் வரும் 4, 5 தேதிகளில் 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி: மாணவர்களே., சரியான பாதையை தேர்வு செய்ய வாங்க....
-
மூத்த குடிமக்கள், ஊனமுற்றோர் தபால் ஓட்டளித்தனர்
-
சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசு கல்லுாரியில் ஆன்லைன் வகுப்பு
-
மீண்டும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
-
அவலுார்பேட்டையில் எல்லை பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு
-
சென்னையில் 13 தொகுதிகளில் திமுக, அதிமுக நேரடி போட்டி!