மீண்டும் உயருது தங்கம் விலை: சவரனுக்கு ரூ.2800 அதிகரிப்பு
சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,800 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 350 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 13,620 ரூபாய்க்கும், சவரன், 1,08,960 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே, ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று முன்தினம் (மார்ச் 24) காலை தங்கம் விலை, கிராமுக்கு 670 ரூபாய் குறைந்து, 12,950 ரூபாய்க்கு விற்பனையானது.
மாலை தங்கம் கிராமுக்கு, 280 ரூபாய் குறைந்து, 12,670 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மாலை 2வது முறையாகவும் திடீரென தங்கம் கிராமுக்கு, 670 ரூபாய் உயர்ந்து, 13,340 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 5,360 ரூபாய் அதிகரித்து, 1,06,720 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 15 ரூபாய் உயர்ந்து, 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு, 15,000 ரூபாய் அதிகரித்து, 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்றைய நிலவரம்
நேற்று (மார்ச் 24) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,720 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 340 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
மாலை ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 250 ரூபாய் உயர்ந்து 13 ஆயிரத்து 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (மார்ச் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,800 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 350 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
குறையும் போது வெல்ல குறைகிறது அதிகரிக்கும் போது அளவு அதிகமாக அதிகரிக்கிறது தங்கம் விலைமேலும்
-
தஞ்சையை கேட்கவில்லை; முருகானந்தம் வாக்குமூலம்
-
இன்று இனிதாக ... (09.04.2026) திருவள்ளூர்
-
கும்மிடியில் ரூ.1.72 லட்சம் பறிமுதல்
-
துண்டறிக்கையால் துயரம்; 'கவனிப்பு' என 'கப்சா'
-
இருங்காட்டுக்கோட்டை மேம்பாலத்தால்... நெரிசல் தீரும்! 4 மணி நேரத்தில் பெங்களூரு பறக்கலாம்
-
மாற்றுத்திறனாளிகள் ஓட்டு போட வீல் சேர் தயார்