மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவன் பலி 

கோவை: செல்வபுரத்தை சேர்ந்தவர் நாசர். அவரது மகன் அனாஸ், 9. அங்குள்ள பள்ளியில், நான்காம் வகுப்பு மாணவர். செல்வபுரம் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள பள்ளிவாசலில் நண்பர்களுடன் பட்டம் விடுவது, விளையாடுவது என நேரத்தை செலவிடுவார்.

ரம்ஜான் அன்று மாலை 6:30 மணியளவில் தொழுகைக்கு சென்றார். இரவு 11 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினார். இறுதியில் பள்ளிவாசல் அருகே விழுந்து கிடந்த அனாஸை மீட்டனர். அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது.

விசாரணை முடிவில், அனாஸ் பள்ளிவாசல் மாடியில் பட்டம் விட்டுக் கொண்டிருந்த போது, தவறி கீழே விழுந்திருக்கலாம் என போலீசார் கூறினர்.

Advertisement