சிட்டி கிரைம் செய்திகள் : புகையிலை பொருட்கள் விற்ற நான்கு பேர் கைது

ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி, போத்தனுார், சிங்காநல்லுார் பகுதியில் ரோந்து, சோதனை பணியில் ஈடுபட்ட போலீசார் விதிமுறை மீறி, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்களை கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் சண்முகசுந்தரம், 27, சாய்பாபாகாலனி பாலுச்சாமி 52, தஞ்சாவூர் முருகேசன் 52, புதுக்கோட்டை சரவணன் 42 ஆகியோரை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மதுபாட்டில்கள் விற்ற ஐந்து பேர் கைது

துடியலுார், கவுண்டம்பாளையம், சிங்காநல்லுார், சாய்பாபாகாலனி பகுதியில், கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் ராபீன் 23, சங்கனுார் லோகநாதன் 41, ராமநாதபுரம் புவனேஷ்வரன் 26, புதுக்கோட்டை சுகாதகர் 29, சிவகங்கை சேர்ந்த சுரேஷ்குமார் 41 ஆகியோரை கைது செய்து பதுக்கிவைத்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement