100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஊர்வலம்

கோவை: சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்பதை வலியுறுத்தி, கோவை ஜி.சி.டி. கல்லுாரியில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலத்தை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று துவக்கி வைத்தார்.

கல்லுாரியில் இருந்து புறப்பட்டு, தடாகம் சாலையில் சென்று, என்.எஸ்.ஆர். சாலைக்கு சென்று மீண்டும் கல்லுாரிக்கு வந்தடைந்தனர்.

பின், கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டது. கல்லுாரி மாணவியர் சிலர் கையெழுத்திட்டனர். பின், செல்பி ஸ்டாண்டில் சிலர் செல்பி எடுத்துக் கொண்டனர். கல்லுாரி முதல்வர் மனோன்மணி, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

இளம் வாக்காளர்களிடம் ஓட்டளிப்பதன் அவசியத்தை உணர வைக்கும் வகையில் பைக் விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி பவன்குமார் துவக்கி வைத்தார்.

முதல் முறை ஓட்டளிப்போர் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். உங்கள் வாக்கு உங்கள் குரல் என்கிற போஸ்டரை இரு சக்கர வாகனத்தில் ஒட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குனர் மதுரா, வட்டார போக்குவரத்து அலுவலர் விஸ்வநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மகேஸ்வரி, தாசில்தார் தணிகைவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement