கூட்டணி நலனுக்காக முடிவை மாற்றினேன்; சொல்கிறார் திருமா
சென்னை: எங்கள் கூட்டணி நலனுக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்பட்டதால் எனது முடிவை மாற்றிக் கொண்டேன் என கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிடும் முடிவை வாபஸ் பெற்றது குறித்து விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
இது குறித்து நிருபர்களிடம், திருமாவளவன் கூறியதாவது: தமிழக மக்கள் திமுக தலைமையிலான அரசு தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறேன். இந்த தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்கு செல்வது, என்னுடைய நோக்கத்திற்கு பயன் தரும் என்று நம்பினேன். பார்லிமென்ட் வருடத்திற்கு 3 முறை கூடுகிறது.
ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் ஒரு முறையோ, இரு முறையோ பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதுவும் 3 நிமிடங்களில் இருந்து 5 நிமிடம் வரை தான் வாய்ப்பு. ஆகவே முழுமையாக என்னுடைய நோக்கத்தின் படி செயல்முடியாத சூழல். சட்டசபையில் இருந்தால் விளிம்பு நிலை மக்களுக்கான பிரச்னையை பேச முடியும் என்று நம்பிக்கை. அதன் அடிப்படையில் நான் போட்டியிடுவது என்று முடிவு எடுத்தேன்.
எங்கள் கூட்டணி நலனுக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்பட்டதால் எனது முடிவை மாற்றிக் கொண்டேன். எந்த வகையிலும் கூட்டணியின் நலன் பாதிக்கப்படக் கூடாது என விரும்புகிறேன். விசிகவுக்கு முன்பே காட்டுமன்னார்கோவில் மண்ணில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் இளைய பெருமாள்.
இளைய பெருமாள் தேசிய அளவில் புகழ்பெற்ற தலைவர். வன்கொடுமை தடுப்புச் சட்டம் உருவாகி இருப்பதற்கு இளையபெருமாளின் பரிந்துரையே காரணம். காட்டுமன்னார்கோவிலில் இளையபெருமாளின் மருமகளுக்கு வாய்ப்பு தரலாம் என்று முதலில் முடிவு செய்தோம், அவர் தலித் சமூகம் அல்லாதவர் என்பதால் போட்டியிட முடியவில்லை.
இளைய பெருமாள் குடும்பத்திற்கு மரியாதை தர வேண்டும் என்பதற்காக எனது தொகுதியை விட்டுத்தந்தேன். காட்டுமன்னார் கோவில் தொகுதி வேட்பாளராக ஜோதிமணியை அறிவித்துள்ளேன். புதுச்சேரியில் வேட்புமனுதாக்கல் முடிவுற்ற பிறகு பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு காணப்பட்டது. அதன்படி எங்களுக்கு உழவர்கரை தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது.
16 இடங்களில் காங்கிரஸ் மற்றும் 13 இடங்களில் திமுகவும் போட்டியிடுவது உறுதியானது. உழவர்கரை தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியினர் வேட்புமனுதாக்கல் செய்து தங்களது மனுக்களை திரும்பப் பெறவில்லை.காங்கிரஸ் மேலிடத்திலிருந்து முகுல் வாஷ்னிக் போன்ற பெரிய தலைவர்கள் புதுச்சேரிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
உழவர்கரையில் மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் போட்டியிடுவது, அவருக்கு ஆதரவாக திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பணியாற்றுவர்கள் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் நாங்கள் வேட்புமனுதாக்கல் செய்திருந்த ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் ஏனம் தொகுதிகளில் வேட்புமனுக்களை திரும்பப் பெறாவிட்டாலும் கூட, நாங்கள் விசிக வேட்பாளருக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட போவதில்லை.
மாறாக அந்த தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபடுவது என முடிவெடுத்து உள்ளோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
வாசகர் கருத்து (25)
aru - ,இந்தியா
05 ஏப்,2026 - 21:54 Report Abuse
இவரை மாதிரி தொடை நடுங்கி எப்படி தமிழ் நாட்டையும், சமூகத்தையும் காப்பாத்த முடியும்....நிலைப்பாட்டில் உறுதியாக வேண்டும்....இப்படி குழப்புனா உங்க பாலேயர்ஸ் எல்லாம் மண்ண போக வேண்டியதுதான்.... 0
0
Reply
பேசும் தமிழன் - ,
05 ஏப்,2026 - 21:18 Report Abuse
இவர் உட்பட இண்டி கூட்டணி ஆட்கள் அத்தனை பேரும் தோல்வியடைவது உறுதி என்று தெரிந்த காரணத்தால் தான் இவர் நைசாக போட்டியில் இருந்து ஜகா வாங்கி விட்டார்..... எப்படியும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற போகிறது என்ற உண்மை தெரிந்த காரணத்தால் தான் போட்டியிட பயந்து போய் வேறு ஆளை பலிக்கடா ஆக்கி விட்டார். 0
0
Reply
பேசும் தமிழன் - ,
05 ஏப்,2026 - 21:12 Report Abuse
திமுக கட்சிக்காரன் மிரட்டி இருப்பான்.... அதனால் போட்டியில் இருந்து விலகி விட்டேன் என்று உண்மையை சொல்ல வேண்டியது தானே.... எதற்க்கு இந்த கம்பி கட்டுற வேலை ..... எப்படியும் உங்கள் தேச விரோத இண்டி கூட்டணி புட்டுக்கும்... இவர் துணை முதல்வர் ஆகும் ஆசையில் தேர்தலில் நிற்பதாக கூறினார்.... இண்டி கூட்டணி வெற்றிபெற போவதில்லை அது வேறு விஷயம்.... அந்த கூட்டணி ஆட்களே இவனை மிரட்டி போட்டியிடாமல் செய்து விட்டார்கள்.... இது தான் கொள்ளை... சீ சீ சீ..... கொள்கை கூட்டணி !!! 0
0
Reply
kjpkh - ,இந்தியா
05 ஏப்,2026 - 21:10 Report Abuse
நான் என்னத்த சொன்னாலும் நீங்க நம்பனும். இல்லேன்னா பாஜக உள்ளே வந்து விடும் முதுகெலும்பு இல்லாத தலைவர். 0
0
Reply
VIDYASAGAR SHENOY - coimbatore,இந்தியா
05 ஏப்,2026 - 18:30 Report Abuse
அடகு கடையில் அடகு வைத்தால் இப்படித்தான் இருக்கும் சிறுத்தை. சாரி அத்தை 0
0
Reply
Sun - ,
05 ஏப்,2026 - 18:28 Report Abuse
தன் கட்சியைச் சேர்ந்த வி.சி.க காரன் ஒருவரைக் கூட நம்பாமல் காங்கிரசில் சீட் கேட்ட ஒரு காங்கிரஸ் காரரை கூப்பிட்டு சீட் கொடுத்திருக்கிறார் திருமா. என்ன ஆச்சு திருமாவிற்கு? 0
0
Reply
ks dilip - ,
05 ஏப்,2026 - 18:02 Report Abuse
சில செயல்களை செய்ய மனதில்.தீரம். வேண்டும்.. முன் வைத்த காலை பின் வைப்பது ஒரு தலைவனுக்கு அழகல்ல..உங்கள்.கட்சியை அடகு வைத்தீர்...இப்போது உங்கள் வீரத்தையும் அடகு வைத்து விட்டு இனி அடங்க மறு அத்து மீறு என்று சொன்னால், அது மிக மிக கேவலமாகத் தான் இருக்கும். 0
0
Reply
theruvasagan - ,
05 ஏப்,2026 - 16:08 Report Abuse
யாரோ நடுநிசில முட்டு சந்துல வச்சு வெளு வெளுன்னு வெளுத்திருக்காப்ல. 0
0
Reply
EagleEye - ,இந்தியா
05 ஏப்,2026 - 15:52 Report Abuse
உங்கள் கட்சி நலனுக்கு என்று சொல்லுங்கள். உங்களை தோற்கடிக்க உங்கள் X-MLAs களே ரெடியாகி விட்டதால் பின் வாங்கி விடீர்கள் 0
0
Reply
MP.K - Tamil Nadu,இந்தியா
05 ஏப்,2026 - 15:44 Report Abuse
முதலிலேயே இதை செய்திருக்கலாமே 0
0
Reply
மேலும் 15 கருத்துக்கள்...
மேலும்
-
கடைசி நாளில் களைகட்டியது; இபிஎஸ், நயினார் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல்
-
திடீர் திடீரென மாறும் வேட்பாளர்கள்:"திக் திக்" திகிலில் கட்சி தொண்டர்கள்!
-
புதுச்சேரியில் 6 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்; ராகுல் வாக்குறுதி
-
ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தி மீண்டும் போட்டி; தந்தைக்காக விட்டுக்கொடுத்தார் மகன்
-
அரசு பஸ்சில் தவெக விளம்பரம்; மென்பொருளை 'ஹேக்' செய்து விட்டதாக நிர்வாகம் தகவல்
-
சனாதன தர்மத்தை மதிப்போருக்கு வாக்களியுங்கள்; ஹரிஹர முத்தைய்யர்
Advertisement
Advertisement