காற்றில் கம்பு சுற்றினால் கட்சி வளர்ந்து விடுமா?
எல்.முருகராஜ், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு, 28 இடங்கள் ஒதுக்கப்பட்டது அதிகமென்று கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி துாக்கியதை அடுத்து, 'நாங்கள், 26-லிருந்து 28-க்கு வந்ததைப் பார்க்காதீர்கள்; 100-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்ட நாங்கள், இப்போது வெறும், 28 இடங்களில் நிற்பதை நினைத்து வேதனைப்படுகிறோம். எங்களின் வேதனையை புரிந்துகொள்ளுங்கள்' என்று அழாத குறையாக கூறியுள்ளார், தமிழக காங்., தலைவர் செல்வப் பெருந்தகை.
காமராஜர் காலத்தில், 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சி செய்த காங்., அவரது காலத்திற்கு பின், தி.மு.க., - அ.தி.மு.க., என இரு திராவிடக் கட்சிகளின் முதுகில் மாறி மாறி பயணம் செய்ததில், 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான' கதையாக நிற்கிறது.
கடந்த 2011-ல், 63 இடங்களில் போட்டியிட்ட காங்., வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது; 2016-ல், 41 இடங்களில் போட்டியிட்டு எட்டு இடங்களில் வெற்றி பெற்றது.
இப்படி தேர்தலுக்கு தேர்தல் சரிவை சந்திக்க காரணம், இங்குள்ள காங்., தலைவர்கள், மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பது, தொகுதி மக்களின் குறைகளை கேட்பது, அடிமட்ட தொண்டர்களை சந்திப்பது, கட்சியை ஒருங்கிணைப்பது என்று எந்த களப்பணியும் செய்யாமல், தேர்தல் நேரத்தில் ஏதாவது ஒரு திராவிட கட்சியின் முதுகில் சவாரி செய்து, நோகாமல் நுங்கு திங்க ஆசைப்பட்டதன் விளைவு இது!
காமராஜருக்குப் பின், டில்லி மேலிடம், 'டிக்டேட்' செய்ய, அதை, 'நோட்ஸ்' எடுத்துப் படிக்கும் மாணவர்களாகத்தான் இங்குள்ள தலைவர்கள் உள்ளனரே தவிர, மக்கள் செல்வாக்குள்ள தலைவர்களாக தங்களை உருவாக்கி கொள்ளவில்லை.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் முதல், தமிழக காங்., தலைவர்களாக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தியில் இருந்து தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசு, கே.எஸ்.அழகிரி என, எவரும் இதற்கு விதிவிலக்கு அல்ல!
இவர்களில் எவராவது ஒருவர் தனித்து நின்று வெற்றி பெறும் அளவுக்கு தங்கள் ஓட்டு வங்கியை வளர்த்துள்ளனரா என்று கேட்டால், விடை பூஜ்ஜியம் தான்!
சவாரி செய்ய கூட்டணி எனும் முதுகு மட்டும் இல்லையென்றால், இவர்கள், 'டிபாசிட்' இழந்து குப்புற விழுந்து விடுவர்.
ஒரு தொகுதியில் நான்கு காங்கிரசார் இருந்தால், அவர்கள் எதிர்க்கட்சியை எதிர்ப்பதைவிட, தங்களுக்குள் அடித்துக்கொள்வதிலேயே குறியாக இருக்கும் போது கட்சி எங்ஙனம் வளரும்?
இளம் தலைமுறையினருக்கு காங்., என்பது, 'தாத்தா காலத்து கட்சி' என்பதை தவிர, காங்., குறித்து பெரிதாக எதுவும் தெரியவில்லை.
இப்படி மக்களை விட்டு வெகுதுாரம் விலகி வந்துவிட்டது, காங்.,
களத்திற்கே வராமல் காற்றில் கம்பு சுற்றிக் கொண்டிருந்து விட்டு, இப்போது கவலைப்பட்டு என்ன பயன்?
lll
சமூக நீதி எங்கே போனது? கே.ஆர்.அனந்த பத்மநாபன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பிளஸ் 2 மாணவி ஒருவர், இயற்கை
உபாதையை கழிக்க வீட்டின் அருகே புதர்கள் நிறைந்த திறந்தவெளி பகுதிக்குச்
சென்றவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
மகளை காணவில்லை என்று அவரது பெற்றோர் குளத்துார் காவல் நிலையத்தில் புகார்
அளிக்க, அப்புகார் விளாத்திகுளம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இரு காவல் நிலையங்களிலும் அங்கிருந்த பெண் காவலர்கள் உட்பட உதவி
ஆய்வாளர்கள், புகாரை அலட்சியப்படுத்தியதுடன், அப்பெண் யாருடனாவது ஓடிப்
போயிருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
மறுநாள், அப்பெண் உடல் முழுதும் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
செல்வாக்கு மிக்கவர்கள் என்றால், காவல் துறையினர் இத்தனை அலட்சியம்
காட்டியிருக்க மாட்டார்கள். ஆனால், புகார் கொடுத்தவர்கள் ஏழைகள் ஆயிற்றே...
போலீசாருக்கு எப்படி சுறுசுறுப்பு வரும்?
உலக நாடுகளுக்கே
முன்னோடியாக ஆட்சி செய்வதாக பிதற்றும் ஸ்டாலின் ஆட்சியில், விளாத்திகுளம்
தாலுகாவில் உள்ள குளத்துார் போன்ற பல கிராமங்களில் இன்றும் பொதுக்கழிப்பறை
வசதி இல்லை. 1960-களைப் போலவே மக்கள் இயற்கை உபாதையை கழிக்க திறந்தவெளிகளை
பயன்படுத்துகின்றனர் என்பது எத்தனை பெரிய அவலம்?
தி.மு.க.,வும்
அதன் கூட்டணி கட்சியினரும் மணிப்பூர் கலவரத்திற்கும், எங்கோ இருக்கும்
பாலஸ்தீன பிரச்னைக்கும் பொங்கி வெடிக்கின்றனர்; போராடுகின்றனர். ஆனால்,
தங்கள் ஆட்சியில் நடந்தோறும் பாலியல் வன்முறைகளையும், கொலைகளையும் கைகட்டி,
வாய் பொத்தி வேடிக்கை பார்க்கின்றனர்.
அதுசரி... தி.மு.க.,ஆட்சியில், சமூக ஒழுக்கமே இல்லை எனும் போது, எங்கிருந்து சமூக நீதி கிடைக்கும்?
***
பலனை அனுபவிக்க முடியவில்லையே! எஸ்.செபஸ்டின், சிவகாசியில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்கா, மத்திய
அரசு மாநிலங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் அனுப்புகிறது. அப்பணம்
அவர்களின் நலத்திட்டங்களுக்கு செலவிடப்படாமலேயே திருப்பி
அனுப்பப்படுகின்றன அல்லது மாநில அரசுகள் வேறு வழிகளில் அதை செலவு
செய்கின்றன.
அவ்வகையில், தமிழகத்தில் சமூக நீதி பேசும் கட்சிகள்
மட்டுமல்ல... தங்கள் ஜாதியினருக்கு தாங்கள் தான் பிரதிநிதிகள் என்று கூறும்
பட்டியலின ஜாதிக் கட்சி தலைவர்கள் கூட இதுகுறித்து பெரிதாக அலட்டிக்
கொள்வதில்லை.
படித்த பட்டியலின இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற,
'அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்' திட்டத்தில் தொழில் துவங்கவும், தொழிலை
விரிவுபடுத்தவும் நபருக்கு, 1.5 கோடி ரூபாய் வரை தமிழக அரசு கடன்
வழங்குகிறது.
கடன் தொகையில், 35 சதவீதத்தை மானியமாகவும் வழங்குகிறது.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவோ, வழிகாட்டி கடன் பெற்றுத்தரவோ
ஜாதிக் கட்சி தலைவர்கள் முன்வருவது இல்லை. காரணம், அவர்கள் அனைவரும் தொழில்
முனைவோராக மாறி விட்டால், கட்சி வேலைக்கு ஆள் இருக்கமாட்டார்கள் அல்லவா?
கண்ணுக்கு அழகான பெண்ணை கல்யாணம் கட்டியும், வாழத் தெரியாதவன் பரதேசம் போன
கதையாக, மத்திய - மாநில அரசுகள் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களின்
முன்னேற்றத்திற்காக பல ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கியும், அதன் பலன்
மேலும்
-
சட்டம் ஒழுங்கு சரியில்லை என வாட்ஸாப்பில் அவதுாறு; கனிமொழி புகார்
-
நவீன வசதியுடன் கூடிய வாகனம் :தீயணைப்பு துறையினர் மகிழ்ச்சி
-
மானாமதுரையில் ஏப். 21ல் சித்திரை விழா துவக்கம்: வைகை சுத்தப்படுத்தப்படுமா:பக்தர்கள் எதிர்பார்ப்பு
-
திருப்புத்துார் தொகுதி மக்களின் தேவைகள் எதிர்பார்ப்பு வேட்பாளர்களின் வாக்குறுதிகளாக மாறுமா
-
காங்., நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு
-
பாக்., பல துண்டுகளாக சிதறும்: அமைச்சர் ராஜ்நாத் எச்சரிக்கை