த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்த முதல் கட்சி

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில், த.வெ.க., தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்தார். அதை தொடர்ந்து, அக்கட்சி சார்பில் விருப்ப மனு பெறப்பட்டு, வேட்பாளர்கள் தேர்வு நடந்தது.

புதுச்சேரியில், பிரபல அரசியல் கட்சி சார்பில் போட்டியிட முயன்ற இந்நாள் -- முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் த.வெ.க.,விற்கு தாவினர்.

இதற்கிடையில், புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கும் த.வெ.க., சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கிடையில் திடீர் திருப்பமாக, த.வெ.க., நேற்று புதுச்சேரியில் நேயம் மக்கள் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

அக்கட்சிக்கு உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி என இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், இவ்விரண்டு தொகுதிகளிலும் அறிவித்த வேட்பாளர்களை த.வெ.க., வாபஸ் பெற்றது.

அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ள முதல் கட்சி நேயம் மக்கள் கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement