அரசு மருத்துவமனையில் ஆட்டிசம் விழிப்புணர்வு
கோவை:ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு ஆரம்ப நிலையிலே சிகிச்சை அளித்தால், உரிய வயதுக்கான வளர்ச்சி நிலையை அடைய செய்ய முடியும் என, டீன் கீதாஞ்சலி பேசினார்.
அரசு மருத்துவமனை, ஆரம்ப மற்றும் இடையீட்டு பயிற்சி மையத்தில், ஆட்டிசம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இம்மையத்தில் சிகிச்சை பெறும் குழந்தைகளுடன் பெற்றோர் பங்கேற்றனர். ஆட்டிசம் என்றால் என்ன, அதன் அறிகுறிகள், அதற்கான சிகிச்சை முறைகள், பாதிப்புக்குள்ளான குழந்தைகளை எப்படி கையாள்வது என்பது குறித்து, குழந்தைகள் நலப்பிரிவு துறை தலைவர் டாக்டர் சசிகுமார் எடுத்துரைத்தார். குழந்தைகள் நலப்பிரிவு டாக்டர் செந்தில்குமார், மோகன்ராஜ், சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்று, பெற்றோருடன் கலந்துரையாடினர்.
'டீன்' கீதாஞ்சலி பேசுகையில்,'' ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு, ஒருங்கிணைந்த கற்றல் சூழல் ஏற்படுத்தி தருவதால், சாதாரண குழந்தைகளுடன் பழகும் போது, இப்பாதிப்பில் இருந்து விரைவில் மீள்கின்றனர். இதற்கு, பெற்றோரின் ஒத்துழைப்பு மிக அவசியம். தன் குழந்தைக்கான பாதிப்பை ஏற்று கொண்டு, அதற்கான சிகிச்சையை நாடுவதே சிறந்தது. ஆரம்ப நிலையிலே சிகிச்சைக்கு அழைத்து வந்தால், விரைவில் அந்தந்த வயதுக்கான வளர்ச்சி நிலையை கொண்டு வர முடியும்,'' என்றார்.
மேலும்
-
குமாரபாளையம் தி.மு.க., வேட்பாளர் பாலுவை ஆதரித்து கனிமொழி எம்.பி., பிரச்சாரம்
-
மைக் இடைப்பாடியை போல் உள்ளது:கனிமொழி கிண்டல்
-
'டபுள் டெக்கர்' பஸ்சில் 800 பேர் மட்டுமே பயணம்
-
நாமக்கல் வேட்பாளர்களுக்கு 3 நாள் செலவு கணக்கு பராமரிப்பு கூட்டம்
-
50 ஆண்டுகால விவசாயிகளின் போராட்டம் 800 பேருக்கு பட்டா வழங்கி தி.மு.க., சாதனை
-
நாமக்கல் நீதிமன்றங்களில் சமரச மைய வார திருவிழா