சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசு கல்லுாரியில் ஆன்லைன் வகுப்பு
புதுச்சேரி: சட்டசபை தேர்தலுக்காக புதுச்சேரியில் உள்ள 4 கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் தற்காலிகமாக ஆன்லைனில் மாற்றப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலுக்காக லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரி, மோத்திலால் நேரு பாலிடெக்னிக், தாகூர் கல்லுாரி ஆகிய 3 கல்லுாரிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் (ஸ்டிராக் ரூம்) வைப்பறை, ஓட்டு எண்ணிக்கை மையம் அமைகிறது. மேலும் முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லூரியில், தேர்தல் பணிக்காக வந்துள்ள துணை ராணுவ படையினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இந்த 4 கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தங்கள் இருப்பிடங்களிலிருந்து மாணவ, மாணவிகள் வகுப்பில் பங்கேற்று வருகின்றனர்.
நேற்று பாரதிதாசன் கல்லூரியில் நடந்த ஆன்லைன் வகுப்பை கல்லுாரி முதல்வர் மதிவாணன் பார்வையிட்டார்.
மேலும்
-
டில்லிக்கு ராஜா மோடி; தமிழகத்திற்கு 'கிங்' பழனிசாமி
-
சட்டசபைக்கு போட்டி; திருமா திட்டம் என்ன?
-
எங்களை பார்த்தா பைத்தியமா தெரியுதா? நா.த.க., சீமான் ஆவேசம்
-
சொந்த சின்னமா; உதயசூரியனா?
-
அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்; ஈரானில் பலி எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது
-
முதுகுளத்துாரில் முஸ்லிம்களால் கரையேறும் கண்ணப்பன்!