டிரம்பின் செல்வாக்கு 36 சதவீதமாக சரிவு
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மீதான மக்களின் நம்பிக்கை, 36 சதவீதமாக சரிந்துள்ளதாக கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக கடந்த ஆண்டு ஜன.,20ல் டிரம்ப் 2வது முறையாக பதவியேற்றார். இந்நிலையில் கடந்த வாரம் அதிபர் டிரம்பின் பணி செயல்பாடு, மக்களிடையே உள்ள செல்வாக்கு குறித்து 'ராய்ட்டர்ஸ் மற்றும் இப்சாஸ்' அமைப்புகள் கருத்துக் கணிப்புகள் நடத்தின. அப்போது அவரது ரேட்டிங், 40 சதவீதமாக இருந்தது.
இந்நிலையில் இன்று எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் அவர் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக அவரது செல்வாக்கு, 36 சதவீதமாக குறைந்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது டிரம்ப் நடத்தும் தாக்குதலுக்கு அமெரிக்கர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. போர் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளதே அவரது ரேட்டிங் குறைய காரணம் என கூறப்படுகிறது.
மற்ற நாடுகளின் விஷயத்தில் அனாவசியமாக மூக்கை நுழைத்தால் மொத்தமா சரிஞ்சிடும்.
என்று இந்தியாவை இவர் பகைத்துக்கொண்டாரோ, அன்றே பிடித்தது சனி.
இவர் போரால் உலக நாடுகளுக்கு எண்ணெய் / எரிவாயு நெருக்கடி ஏற்பட்டு உள்ளன!
still 36%??? that's surprising !
அதிபர் ட்ரம்ப்பை எப்போதும் தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் அமெரிக்க பத்திரிக்கையான WaPo கீழ்கண்டவாறு செய்தியை வெளியிட்டிருக்கிறது: டிரம்ப் தனது எந்தவொரு தோல்விக்கும் ஒருபோதும் பொறுப்பேற்பதில்லை அது எப்போதும் வேறொருவரின் தவறு என்றே அவர் கருதுகிறார். ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதில் அமெரிக்கா அடைந்த தோல்விக்கு, அவர் ஏற்கனவே ஐரோப்பிய நட்பு நாடுகளின் மீது பழி சுமத்தத் தொடங்கிவிட்டார். அடுத்து, முற்போக்குச் சிந்தனை கொண்ட தளபதிகள் (Woke generals) அவர் பழிசுமத்தும் பட்டியலில் இணையக்கூடும். இஸ்ரேலையும் அவர் பலிகடாவாக ஆக்குவதற்கு இன்னும் எவ்வளவு காலம் பிடிக்கும் என தெரியவில்லை? கூடிய சீக்கிரமே அதுவும் நடக்கும். டிரம்பின் இந்த விவேகமற்ற போர் நடவடிக்கையினால் ஏற்படக்கூடிய எதிர்விளைவுகள் இப்போதுதான் தொடங்கிக் கொண்டிருக்கின்றன.