அரசியலுக்கு விஜய் சரிப்பட்டு வரமாட்டார்

பிரியா, 28
தனியார் நிறுவன ஊழியர், மதுரை
டி .எம்.கே., ஆட்சியில் உரிமைத் தொகை, இலவச பஸ் பயணம் போன்ற திட்டங்கள் நல்லாத்தான் இருக்கு. இப்போதைய நிலவரப்படி டி.எம்.கே.,வுக்கு தான் என் ஓட்டு.

சட்டம் - ஒழுங்கை எடுத்துக்கொண்டால், போலீஸ்காரங்க சுதந்திரமாக செயல்பட முடியாத நிலையில் இருக்காங்க. பல ஸ்டேஷன்களில் நேர்மையாகவே விசாரணை நடப்பது இல்லை. கட்சி, ஜாதி பின்புலத்தின் அடிப்படையில் தான் போலீஸ்காரங்க செயல்படுறாங்க. ஜெயலலிதா காலத்தில் போலீசாருக்கு இதுபோன்ற நிலை இல்லை. இதில் தான் இந்த ஆட்சி மீது கொஞ்சம் கோபம் வருது.

தற்போது ஆட்சியை பிடிக்க துடிக்கும் விஜய், கிறிஸ்துமஸ், ரம்ஜான் நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்கிறார். பொங்கல் விழாவிற்கு எங்கே போனார். அவர் சரிப்பட்டு வரமாட்டார். பி.ஜே.பி.,ல அண்ணாமலை செயல்பாடு நன்றாக இருந்தது. மோடியின் செயல்பாட்டை தமிழக இளைஞர்களிடம் அதிகமாக கொண்டு சேர்த்தவர். அவரை பதவியில் இருந்து மாற்றியது தவறு. அவருக்காக அந்த கட்சிக்கு ஓட்டு போடலாம்னு கூட தோணுது.

Advertisement