போட்டித்தேர்வு குளறுபடிகளால் நொந்தோம்

எஸ்.சூர்யாராம், 27விருதுநகர்

இளைஞர்கள் நிறைய பேர் தேர்தலில் பங்களிக்க வேண்டும். படித்தவர்கள் அரசியலுக்கு வேண்டும். முன்னாள் ஐ.பி.எஸ்., அண்ணாமலை தமிழக பா.ஜ., தலைவராக இருந்தபோது அரசியல் சூழல் ரொம்ப பெட்டராக இருந்தது. தி.மு.க., ஆட்சிக் காலம் மக்களுக்கு கடும் நெருக்கடிகளை தரும் ஒன்றாக உள்ளது. போட்டித் தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு ஏமாற்றங்களையே தந்தனர்.

டி.என்.பி.எஸ்.சி.,யில் அறி விப்பு வெளியாகி, இரண்டு ஆண்டுகள் இழுபறிக்குப் பின், ரோடு இன்ஸ்பெக்டர் தேர்வு நடத்தினர். அத்தேர்வு தகுதி நிர்ணயத்திலும் பல்வேறு குளறுபடிகள். ஒரு சிவில் இன்ஜினியராக, நான் அத்தேர்வுக்கு தயாராகி கடும் சிரமத்திற்கு ஆளானேன். அறிவித்த பணியிடமும் கம்மி. முடிவுகளையும் இழுத்தடித்தனர். மற்ற தேர்வுகளுக்கும் இதே நிலை தான்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாத பசங்க தான், விஜய் மீது ஆர்வமாக உள்ளனர். அவருக்கே இன்னும் அனுபவம் தேவைப்படுகிறது. இந்த தேர்தலில் அவரது கட்சிக்கு கூட்டணி இல்லாதது பெரிய மைனஸ். சில இளைஞர்கள் கண்மூடித்தனமாக அவரை பின்பற்றாமல், அரசியல் அறிவோடு செயல்பட வேண்டும்.

Advertisement