தேர்தலில் போட்டியிடவில்லை: ஆதரவாளர்களுக்கு 'சீட்' வழங்க அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை : தன் ஆதரவாளர்கள் ஐந்து பேருக்கு 'சீட்' வழங்குமாறு, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் பீயூஷ் கோயலிடம் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ஜ.,வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி பேச்சு நடத்த சென்னை வந்த, மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ., பொறுப்பாளருமான பீயூஷ் கோயல், கடந்த 24ம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.
காலை முதல் மாலை வரை நீடித்த ஆலோசனை கூட்டத்தில், வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் குறித்து ஆலோசனை நடந்தது. அதில் பங்கேற்ற அண்ணாமலையிடம், 'நீங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி எது?' என பியூஷ் கோயல் கேட்டுள்ளார். அதற்கு, 'தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக, தமிழகம் முழுதும் பிரசாரம் செய்ய விரும்புகிறேன். தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை. என் ஆதரவாளர்கள் ஐந்து பேருக்கு 'சீட்' வழங்குங்கள்' என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதில், முருகானந்தம், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் பெயர் இருப்பதாக கூறப்படுகிறது. திருப்பூர் தெற்கு, ராமநாதபுரம், நாகர்கோவில் உள்ளிட்ட சில தொகுதிகளை, தன் ஆதரவாளர்களுக்காக அண்ணாமலை கேட்டுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேசமயத்தில் கட்சி மேலிடம் உத்தரவிட்டால் போட்டியிட தயாராக உள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர் கருத்து (19)
அப்பாவி - ,
26 மார்,2026 - 06:57 Report Abuse
பின்னாடி கோஷ்டி கானம் பாட வசதியா இருக்கும். 0
0
Reply
பா மாதவன் - chennai,இந்தியா
26 மார்,2026 - 00:10 Report Abuse
நல்ல நேர்மையான, திறமையான சிறந்த மனிதர், இவர் தேர்தலில் போட்டியிட வில்லை என்றால், நஷ்டம் பிஜேபி க்கு மட்டுமல்ல தமிழக அரசியலுக்கும் தான். சிறந்த தலைவரை உற்சாகப் படுத்த வேண்டியது பாஜக கடமை. 0
0
Reply
Raj - Chennai,இந்தியா
25 மார்,2026 - 23:48 Report Abuse
அண்ணாமலை கூடிய விரைவில் புதிய கட்சியை தொடங்கி விடுவார். 0
0
Reply
S. Venugopal - Chennai,இந்தியா
25 மார்,2026 - 22:53 Report Abuse
மத்தியில் உள்ள ஆட்சியினை வைத்து பதவியில் இல்லாமல் சம்பாதிக்கும் தரகர்களாக சேவைசெய்யும் அரசியல் தலைவர்களுக்குத் தேர்தலில் நிற்கத் தேவை இல்லை, 0
0
Reply
ஆரூர் ரங் - ,
25 மார்,2026 - 22:41 Report Abuse
அமர் பிரசாத்துக்கு சீட் கேட்பதும் படுகுழியில் விழுவதும் ஒன்றே. . 0
0
Reply
ஆரூர் ரங் - ,
25 மார்,2026 - 22:40 Report Abuse
முதல்வராக வேண்டியவர் வெறும் எம்எல்ஏ வாக ஆவதற்கு தேர்தலில் நிற்க வேண்டியதில்லை. எப்படியும் அதிமுக பிரச்சாரத்திற்கு அழைக்காது. பிஜெபி யின் 27 இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்தால் போதும். அதிலும் தமிழிசை எடப்பாடி பிரசாரம் மட்டுமே போதும் என எண்ணுகிறார்? 0
0
Reply
S. Venugopal - Chennai,இந்தியா
25 மார்,2026 - 22:28 Report Abuse
தன் அதார்வாளர்களுக்கு சீட் கேட்டால் ப ஜ க விலும் மற்ற காட்சிகள் போல் பல கோஷ்டிகள் உருவாக வழி வகை உண்டாகாதா? 0
0
Reply
Seekayyes - ,
25 மார்,2026 - 22:15 Report Abuse
இது தெரிந்ததே. அண்ணாமலை இந்த தேர்தல் வரை பாஜகவில் இருப்பார். அதன் பிறகு ஒன்று தனிக்கட்சி துவங்குவார் அல்லது அரசியலில் இருந்து முழுக்கு போட்டு விடுவார். 0
0
Reply
சிவம் - ,
25 மார்,2026 - 22:07 Report Abuse
மிகவும் சரியான முடிவு. வாழ்த்துக்கள். 0
0
Reply
SRIRAMA ANU - Chennai,இந்தியா
25 மார்,2026 - 22:04 Report Abuse
இவர் நின்றாலும் கண்டிப்பாக ஜெயிக்க மாட்டார்.. எதற்கு திரும்ப அசிங்கப்பட வேண்டும் என்பதற்காகவே இவர் நிற்க மாட்டார். 0
0
தெய்வேந்திரன்,மண்டபம் இராமநாதபுரம் மாவட்டம் - ,
25 மார்,2026 - 22:24Report Abuse
அறிவாலயத்தில் அடைப்பு எடுக்கும் நீயே அசிங்கப்படாத போது ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி எதற்கு அசிங்கப்பட போகிறார் 0
0
Kumar Kumzi - ,இந்தியா
25 மார்,2026 - 23:38Report Abuse
ஓசிகோட்டர் கொத்தடிமைக்கு அம்பூட்டு வயிற்றெரிச்சல் ...த்தூ 0
0
Reply
மேலும் 7 கருத்துக்கள்...
மேலும்
-
புவிசார் காகித கூழ் பொம்மைகள் மூலம் 100 சதவீத ஓட்டு பதிவு விழிப்புணர்வு
-
தேர்தல் முடிந்தால் தான் விஜய்க்கு விபரம் புரியும்: இபிஎஸ்
-
2 தொகுதியில் விஜய் போட்டி; முன்பே சொன்னது தினமலர்!
-
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
Advertisement
Advertisement