2 தொகுதியில் விஜய் போட்டி; முன்பே சொன்னது தினமலர்!
நமது சிறப்பு நிருபர்
சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட, தவெக தலைவர் விஜய் முடிவு செய்திருப்பதாக, முன்பே மார்ச் 12ல் தினமலர் நாளிதழ், இணையத்தில் வெளியான செய்தி உண்மையானது.
நமது நாளிதழ் மற்றும் இணையத்தில் மார்ச் 12ம் தேதி சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட, விஜய் முடிவு செய்துள்ளார். பெரம்பூர் தொகுதியில், கிறிஸ்துவர்களின் ஓட்டுகள் 14 சதவீதம் உள்ளன.
த.வெ.க.,வின் முதல்வர் வேட்பாளராக விஜய் இருப்பதால், ஒரு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்து விடக்கூடாது என்பதற்காக, திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட, விஜய் முடிவு செய்துள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதியில், வெள்ளாளர் சமுதாயத்திற்கு, 50,000 ஓட்டுகள் உள்ளன. தலித் கிறிஸ்துவர் ஓட்டுகளும் கணிசமாக உள்ளதால், அத்தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிகம் என, விஜய் கருதுவதாக த.வெ.க., வட்டாரத்தில் பேசப்படுகிறது என கார்டூன் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது.
தற்போது, இன்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது போலவே சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக விஜய் அறிவித்தார். இதன் மூலம் முன்பே கணித்து துல்லியாக, தினமலர் வெளியிட்ட செய்தி உண்மையானது. இது குறித்து உங்களது கருத்தை கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!
முன்பே கணித்து மார்ச் 12ல் தினமலர் இணையத்தில் வெளியான செய்தி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் தேர்தல் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
மேலும்
-
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
-
நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி; வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு
-
ஆண்டிப்பட்டியில் 3ம் முறையாக அண்ணன், தம்பி நேருக்கு நேர் மோதல்
-
திருச்சி சமயபுரம் கோவிலில் மேற்கூரை இடிந்து பெண் பக்தர் பலி