ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நான்கு சமரச சார்பு மையம் திறப்பு
திண்டிவனம்: திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ரூ.10 லட்சம் செலவில் சமரச சார்பு மையத்தின் 4 புதிய அறைகளை,மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார்.
ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மூன்றாவது மாடியில், சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில், சமரச சார்பு மையத்திற்காக 4 குளிரூட்டப்பட்ட அறைகள் ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மையத்தை, விழுப்புரம் மாவட்ட நீதிபதி மணிமொழி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் திண்டிவனம் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி முகமது பாரூக், இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஹேமந்தகுமார், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிபதி குமாரவர்மன், விழுப்புரம் குடும்ப நல நீதிபதி ராஜமகேஷ், விழுப்புரம் மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய செயலாளர் ஜெயச்சந்திரன், திண்டிவனம் முதன்மை சார்பு நீதிபதி கிறிஸ்டியன், திண்டிவனம் கூடுதல் சார்பு நீதிபதி ஆயிஷா பேகம். மோட்டார் வாகன தீர்ப்பாய நீதிபதி பிரியா, மாவட்ட உரிமையியல் நீதிபதி அனுபிரியா, கூடுதல் மாவட்ட நீதிபதி வனஜா, மாஜிஸ்திரேட்டுகள் இளவரசி, அபிநயா, அரசு வழக்கறிஞர் அருணகிரி, வழக்கறிஞர் சங்க தலைவர் அஜ்மல் அலி, செயலர் ராமச்சந்திரன், அட்வகேட் அசோசியேஷன் தலைவர் சந்திரசேகர், செயலர் மோகனசுந்தரம் , வழக்கறிஞர் நல சங்க செயலர் கிருபாகரன், பெண் வழக்கறிஞர் சங்க தலைவர் சித்ரா, மூத்த வழக்கறிஞர் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
தேர்தல் முடிந்தால் தான் விஜய்க்கு விபரம் புரியும்: இபிஎஸ்
-
2 தொகுதியில் விஜய் போட்டி; முன்பே சொன்னது தினமலர்!
-
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
-
நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி; வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு