மூன்று வேட்பாளர்களை அறிவித்தது பா.ம.க.,
சென்னை: மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, பா.ம.க., தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், பா.ம.க.,வுக்கு, 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதில், நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில், பா.ம.க., பொதுச்செயலர் வடிவேல் ராவணன்; அம்பத்துார் தொகுதியில், முன்னாள் நகராட்சித் தலைவர் சேகரன்; விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் பா.ம.க., இளைஞரணித் தலைவர் கணேஷ்குமார் ஆகியோர் போட்டி யிடுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கடந்த 2021 தேர்தலில், கீழ்வேளூரில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வடிவேல் ராவணன், 2011ல் செஞ்சியில் வென்ற கணேஷ்குமார் ஆகியோருக்கு, மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement