தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லையாம்; ஆதரவாளர்களுக்கு 'சீட்' வழங்க கோரிக்கை

6

சென்னை: தன் ஆதரவாளர்கள் ஐந்து பேருக்கு 'சீட்' வழங்குமாறு, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ., பொறுப்பாளருமான பீயூஷ் கோயல், கடந்த 24ம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அண்ணாமலையிடம், 'நீங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி எது?' என கேட்டுள்ளார்.

அதற்கு, 'தே.ஜ., கூட்டணி வெற்றிக்காக, பிரசாரம் செய்ய விரும்புகிறேன். தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை. என் ஆதரவாளர்கள் ஐந்து பேருக்கு 'சீட்' வழங்குங்கள்' என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதில், முருகானந்தம், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் பெயர் இருப்பதாக கூறப் படுகிறது.

திருப்பூர் தெற்கு, ராமநாதபுரம், நாகர்கோவில் உள்ளிட்ட சில தொகுதிகளை, தன் ஆதரவாளர்களுக்காக அண்ணாமலை கேட்டுள்ளார்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement