அண்டை நாடுகள் மீதான தாக்குதலை நிறுத்திக்கொள்ளுங்கள்; ஈரானுக்கு ஐநா வலியுறுத்தல்
நியூயார்க்: போரில் நேரடியாகப் பங்கேற்காத அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவதை ஈரான் நிறுத்தி கொள்ள வேண்டும் என ஐநா வலியுறுத்தி உள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்., 28ம் தேதி தாக்குதலை துவக்கின. இது உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. போரை நிறுத்துவதற்கு வாய்ப்பாக, 5 நாட்கள் தாக்குதல்களை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இருப்பினும், இரு தரப்பும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டு வர, ஒரு மாத போர் நிறுத்தம் உள்ளிட்ட 15 அம்சம் கொண்ட அமைதி திட்டத்தை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்நிலையில் அண்டை நாடுகள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு ஈரானுக்கு ஐநா வலியுறுத்தி உள்ளது. இது குறித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் எல்லை மீறிச் சென்றுவிட்டது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு நான் விடுக்கும் செய்தி என்னவென்றால், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர இதுவே சரியான தருணம். ஈரானுக்கு நான் சொல்வது என்னவென்றால், இந்த மோதலில் நேரடியாகப் பங்கேற்காத அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.
ஐநா சபை ஏன் டிரம்ப் போர் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை . ? எந்த நாடும் எந்த நாட்டுடனும் சண்டை செய்யவேண்டாம் . அவரவர்கள் நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அமைதியாக இருக்கவேண்டும் .
ஐநாவை கலைப்பதற்கு இதுதான் சரியான தருணம்.
1 ஐநா என்ற ஒன்று இருக்கிறது என கிச்சுகிச்சு மூட்டியிருக்கலாம் இவர்.
அல்லது,
2 இந்த உலகப்போலீஸின் கட்டுப்பாட்டில் தன்னால் எதுவும் சாதிக்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில், "நான் சொல்றேன்னு நெனச்சுக்காதே சொல்லிட்டேன்னு நிறுத்திராதே" என்று சொல்ல விழைகிறாருன்னு புரியல.
அநேகமாக இரண்டாவதா சொன்னதுதான் உண்மையாக இருக்குமோ
ஐ நா அப்டினா என்ன சார்?? அமெரிக்காவுக்கு முட்டு கொடுப்பதா?? உங்க பக்கத்துல ஒரு அர கிறுக்கன் இருக்கான்... அவன் காதுல சங்க வச்சு ஊதுங்க.. நீங்க பஜ்ஜியும் போண்டாவும் சாப்பிட்டு கிளம்பலாம். ... இது எல்லாம் ஒரு அமைப்பு??
தம்பி அண்டை நாடுகளின் வழியாக தாக்குதல் நடத்தாமல் இருக்க சொல்லுங்களேன் பார்க்கலாம். எங்க பாரு இந்த பணக்கார அரசியல் இருக்கிறதுமேலும்
-
தேர்தல் முடிந்தால் தான் விஜய்க்கு விபரம் புரியும்: இபிஎஸ்
-
2 தொகுதியில் விஜய் போட்டி; முன்பே சொன்னது தினமலர்!
-
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
-
நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி; வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு