ஆந்திராவில் பஸ்சில் தீப்பற்றியது; பயணிகள் 10 பேர் உயிரிழந்த சோகம்
அமராவதி: ஆந்திராவில் டிப்பர் லாரி மீது தனியார் சொகுசு பஸ் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மார்க்கபுரம் மண்டலத்தின் ராயவரம் அருகே இன்று அதிகாலை தனியார் சொகுசு பஸ் ஒன்று கற்கள் ஏற்றிச் சென்ற லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. பிறகு மோதிய வேகத்தில் பஸ்சும், லாரியும் மளமளவென தீப்பற்றி எரிய தொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்தனர். இந்த சம்பவத்தில் 10 பேர் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும் 20 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (8)
M Ramachandran - Chennai,இந்தியா
26 மார்,2026 - 17:14 Report Abuse
பஸ்ஸில் மற்றும் வாஹனங்களில் இரவு பயணத்தைய்ய தவிர்க்க வேண்டும். பொறுப்பின்மையால் அதி வேகம் பிற வாகனங்க்லிய மதிக்காமல் கவன குறைவாக வும் திமிரடியாகவும் ஓட்டுதல். சென்னையில் மிக மோசமாக இருசக்கர மற்றும் ஆட்டோக்கள் திமிரடியாக ஓட்டுகிறார்கள். அவர்களுக்கு ஒரு நாள் காத்திருக்கு என்பதாய் மறக்க கூடாது. இங்கு காவல் துறை அதன் பணியாய் சரிய வர செய்வதில்லை. ஓட்டுநர் லீனக் பொய் செர்டிபிகாட் கொடுத்து மிக குறையந்த வழியதுடையர்கள் வாகனங்கள் ஓட்டும் உரிமம் பெற்று சாலையில் பொறுப்பில்லாமல் வாடகைய்ய வண்டி ஓட்டுகிறார்கள். அதுவும் விபத்திற்கு காரணமாகிறது 0
0
Reply
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
26 மார்,2026 - 16:44 Report Abuse
It is difficult to escape from air conditioned bus in the event of accident. 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
26 மார்,2026 - 12:39 Report Abuse
RIP. 6 மாதத்தில் 3 வது விபத்து. ஓட்டுநர்களின் குடி, தூக்கமில்லமல் ஓட்டுவது, குளிர்ச்சாதன பஸ்களின் டீசல் டாங்க், மிகவும் தீப்பற்ற ஏதுவாக உள்ளது. 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
26 மார்,2026 - 11:53 Report Abuse
விபத்துக்கான காரணம் 1 அதிவேகம், 2 தூக்க கலக்கம், 3 குடிபோதையில் வாகன இயக்கம். 0
0
Reply
அப்பாவி - ,
26 மார்,2026 - 10:37 Report Abuse
ஒருத்தரும் சாலை விதிகளை மதிப்பதில்லை. ஆளாளுக்கு ஜுகாடு. அரசே ஜும்லாவில் ஓடுது. 0
0
Reply
Premanathan S - Cuddalore,இந்தியா
26 மார்,2026 - 10:07 Report Abuse
காலனிடம் செல்ல எல்லோருக்கும் அவசரம் ஓம் ஷாந்தி 0
0
Reply
Mahesh Rajan - ,
26 மார்,2026 - 09:35 Report Abuse
ஓம் ஷாந்தி 0
0
Reply
Nandakumar Naidu - ,
26 மார்,2026 - 08:52 Report Abuse
"Om Shanti" அவர்களுடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஈஸ்வரனை பிரார்த்திப்போம். 0
0
Reply
மேலும்
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
-
நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி; வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு
-
ஆண்டிப்பட்டியில் 3ம் முறையாக அண்ணன், தம்பி நேருக்கு நேர் மோதல்
-
திருச்சி சமயபுரம் கோவிலில் மேற்கூரை இடிந்து பெண் பக்தர் பலி
-
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியை எதிர்த்து களமிறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார்?
Advertisement
Advertisement