இன்ஜின் பழுது: இண்டிகோ விமானம் டில்லியில் அவசர தரையிறக்கம்
புதுடில்லி: டில்லி சென்ற இண்டிகோ விமானத்தின் இன்ஜின் பழுதடைந்ததால் அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், டில்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து டில்லிக்கு இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான போயிங்737 ரகத்தை சேர்ந்த 6E 579 விமானம் 161 பயணிகளுடன் கிளம்பியது. விமானம் டில்லியை நெருங்கிய நிலையில், இன்ஜின் பழுதடைந்தது. இது குறித்து உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார்.
உடனடியாக விமான நிலையம் உஷார்படுத்தப்பட்டு,தீயணைப்பு வாகனங்கள் தயாராக வைக்கப்பட்டன. பிறகு, அந்த விமானம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும், பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இது குறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் தொழில்நுட்ப பிரச்னை கண்டறியப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனுமதி வாங்கி விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விமானம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கான பாதுகாப்புக்கு உயர் முன்னுரிமை அளித்து வருகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
துருக்கியின் கோரியன்டன் விமான நிறுவனத்தின் விமானங்களை, இண்டிகோ நிறுவனம் குறுகிய காலத்துக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. அவ்வாறு வாங்கப்பட்ட 5 விமானங்களில் ஒன்றில் தான் இன்று இன்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (3)
Venugopal, S - ,
29 மார்,2026 - 00:44 Report Abuse
எப்போதும் விலை ஏற்றத்தை பயணிகளுக்கு அளிப்பதை தவிர இவர்களின் எண்ணத்தில் எதுவும் இல்லை 0
0
Reply
அரசி - ,
28 மார்,2026 - 16:49 Report Abuse
துருக்கி நமது அரசியல் எதிரி. வியாபார எதிரி இல்லை. பழசையெல்லாம் மறந்துரணும். 0
0
Reply
அப்பாவி - ,
28 மார்,2026 - 16:47 Report Abuse
எரிபொருள் ரொப்ப மறந்திருப்பாங்களோ? 0
0
Reply
மேலும்
-
தேர்தல் முடிந்தால் தான் விஜய்க்கு விபரம் புரியும்: இபிஎஸ்
-
2 தொகுதியில் விஜய் போட்டி; முன்பே சொன்னது தினமலர்!
-
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
-
நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி; வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு
Advertisement
Advertisement