அ.தி.மு.க., அதிருப்தி நிர்வாகிகளுக்கு வலை வீசியுள்ள த.வெ.க.,

ராமநாதபுரம்: சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் த.வெ.க., இறங்கியுள்ளது.

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் பா.ஜ., -பா.ம.க., -அ.ம.மு.க., -த.மா.கா., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு போக 169 தொகுதிகளில் அ.தி.மு.க., போட்டியிடுகிறது. இவற்றில் 'சீட்டை' எதிர்பார்த்து காத்திருந்த பல முக்கிய நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதனால் ‛சீட்' கிடைக்காத அதிருப்தி நிர்வாகிகளை தன் பக்கம் இழுக்க த.வெ.க., முயற்சித்து வருகிறது ராமநாதபுரம் தொகுதியில் 2016 ல் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்து வந்த 2021 தேர்தலில் கூட்டணி அமைத்து பா.ஜ., விற்கு தொகுதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இத்தேர்தலிலும் பா.ஜ., விற்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் அறிவிப்பதற்கு 6 மாதங்களுக்கு முன் இருந்து ராமநாதபுரத்தில் மணிகண்டன் பல்வேறு பணிகளை செய்து வந்தார்.

தற்போது வேறு தொகுதியிலும் 'சீட்' வழங்கப்படவில்லை. இதனிடையே அ.தி.மு.க., வில் இருந்து சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தரப்பில் இருந்து அ.தி.மு.க., வில் உள்ள அதிருப்தி நிர்வாகிகளை த.வெ.க., பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். மணிகண்டனிடம் த.வெ.க., வில் இணையுமாறு பேசி , போட்டியிட வாய்ப்பு தருவதாக கூறுவதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

-

Advertisement