உயருது தொலிபருப்பு, மல்லி குறையுது முண்டு வத்தல் விலை

விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் தொலிபருப்பு 100 கிலோவிற்கு ரூ.600 உயர்ந்து ரூ.9600, மல்லி நாடு 40 கிலோவிற்கு ரூ.100 முதல் ரூ.1000 உயர்ந்து ரூ.6000 முதல் ரூ.6600, முண்டு வத்தல் 100 கிலோவிற்கு ரூ.3000 குறைந்து ரூ.24,000 முதல் ரூ.28,000 என விற்கப்படுகிறது.

இங்கு க.எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ரூ.3500, ந.எண்ணெய் 15 கிலோ ரூ.6105, பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.105 குறைந்து ரூ.2120, ரவை 30 கிலோவிற்கு ரூ.10 குறைந்து ரூ.1530, மைதா 90 கிலோவிற்கு ரூ.50 குறைந்து ரூ.4550, பொரிகடலை 50 கிலோ ரூ.4000, கொண்டைக்கடலை 100 கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.5800, சர்க்கரை 50 கிலோ ரூ.2130 என விற்கப்படுகிறது.

துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோவிற்கு ரூ.300 குறைந்து ரூ.11,500 முதல் ரூ.12,300, பாசிப்பருப்பு 100 கிலோவிற்கு ரூ.300 முதல் ரூ.400 உயர்ந்து ரூ.9500 முதல் ரூ.9600, உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோவிற்கு ரூ.200 முதல் ரூ.300 உயர்ந்து ரூ.10,200 முதல் ரூ.10,500, உளுந்து லயன் 100 கிலோ ரூ.7600 முதல் ரூ.8000, உளுந்து நாடு 100 கிலோ ரூ.7000 முதல் ரூ.7200 என விற்கப்படுகிறது.

பட்டாணி பருப்பு 100 கிலோ ரூ.4300 முதல் ரூ.4350, பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோ ரூ.7500, மல்லி லயன் 40 கிலோவிற்கு ரூ.300 முதல் ரூ.400 உயர்ந்து ரூ.5100 முதல் ரூ.5300, கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ.500 உயர்ந்து ரூ.6200, எள் புண்ணாக்கு 50 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.2100 என விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement