தங்கமயில் நிறுவனத்தில் ஆண்டு சிறப்பு விற்பனை

விழுப்புரம்: தங்கமயில் நிறுவனத்தில் வருடாந்திர சிறப்பு விற்பனை கொண்டாட்டத்தையொட்டி 3 நாட்களுக்கு மிக குறைந்த சேதாரத்தில் நகை விற்பனை செய்யப்படுகிறது.

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தங்கமயில் ஜூவல்லரி தமிழகம் முழுதும் 66 கிளைகளோடு செயல்பட்டு வருகிறது. 35 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களையும், 3,500க்கும் மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் விதமாக 'வருடாந்திர சிறப்பு விற்பனை' சலுகைகளை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் வாங்கும், தங்க செயின்களுக்கு சேதாரம் 3 சதவீதம் மட்டுமே.

மாலை, நெக்லஸ், வளையல்களுக்கு சேதாரம் 6 சதவீதமும், ஆன்டிக் கலெக் ஷன்கள், ஜெ.ஓ., கலெக் ஷன்கள், நயா கலெக் ஷன்கள், மோதிரம் மற்றும் தோடுகள் உள்ளிட்ட அனைத்திற்கும் சேதாரம் 9 சதவீதம் மட்டுமே ஆகும். 7 காரட்டிற்கு மேல் பெல்ஜியம் கட் வைர நகைகள் வாங்குபவர்களுக்கு காரட்டிற்கு 30 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

வெள்ளி நகைகள், பரிசு பொருட்களுக்கு 10 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. வெள்ளி கொலுசுகள், வெள்ளி பொருட்களுக்கு செய்கூலி இல்லை. பிளாட்டிணம், ரூபி எமரால்டு நகைகளுக்கு சேதாரத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த சிறப்பு சலுகைகள் அனைத்தும் இன்று 29ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இது தவிர, சேமிப்பு திட்டத்தில் இணையும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படுவதாக, துணை மேலாளர் காளிகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisement