பிரீத்தி மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை 

மதுரை: மதுரை உத்தங்குடி பிரீத்தி மருத்துவமனையில் பெண்களுக்கான இலவச பரிசோதனை முகாம் இன்றுடன் நிறைவடைகிறது.

இங்கு மார்ச் மாதம் முழுவதும் மங்கையர் நல மருத்துவ விழா என்ற பெயரில் பெண்களுக்கான இலவச பரிசோதனை வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் நடந்து வருகிறது.

குழந்தைபேறு தலைமை மருத்துவர் ஹேமா சிவக்குமார் கூறியதாவது: 20 வயது முதல் 60 வயது பெண்களுக்கான இலவச பரிசோதனை நடத்தி வருகிறது. பல்வேறு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையின் கீழ், ஆயிரக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். முகாமில் ரத்தப்பரிசோதனை, மார்பக புற்றுநோய்க்கான மேமோகிராம் பரிசோதனை, புற்றுநோய்க்கான ஸ்கேன் இடம்பெற்றுள்ளன. உடல் எடையை குறைக்க பிசியோதெரபிஸ்ட், ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆலோசனையும் வழங்கப்படுகிறது.

மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் சுயபரிசோதனை முறைகள், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு, தடுப்பூசி ஆலோசனைகள், கருமுட்டை புற்றுநோய் தடுப்பு ஆலோசனைகள் வழங்குகிறோம். ஆரோக்கியமான பெண்ணால் தான் ஆரோக்கிய தலைமுறையை உருவாக்க முடியும் என்ற நோக்கில் பரிசோதனை முகாம் நடக்கிறது. இவ்வாறு கூறினார்.

Advertisement