காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பா.ம.க., - வி.சி., கட்சி நேரடி மோதல்
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் தனித் தொகுதியில் பா.ம.க., வேட்பாளராக டாக்டர் அன்பு சோழன் மீண்டும் போட்டியிடுகிறார்.
காட்டுமன்னார்கோவில் தனி தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,விற்கும், தி.மு.க., கூட்டணியில் வி.சி., கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறார். பா.ம.க.,வில் மருத்துவர் அணி மாநில செயலாளர் டாக்டர் அன்பு சோழன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, மீண்டும் போட்டியிடுகிறார்.
இத்தொகுதியில் கடந்த 2016 தேர்தலில் வி.சி., கட்சி தலைவர் திருமாவளவனும், பா.ம.க., மருத்துவர் அணி டாக்டர் அன்பு சோழனும் போட்டியிட்டு இருவரும் அ.தி.மு.க.,விடம் தோல்வியடைந்தனர். இத்தேர்தலில் அன்புசோழன் அ.தி.மு.க., கூட்டணியிலும், திருமாவளவன் தி.மு.க., கூட்டணியில் மீண்டும் வேட்பாளராக களம் காண்பது குறிப்பிடதக்கது.
மேலும்
-
வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? பிரசாரத்திற்கு வரும் பாஜ தலைவர்களுக்கு முதல்வர் சவால்
-
சீட்டும் இல்லை; கொடுத்த காசும் போச்சு: மக்கள் நிதி மய்யம் ஆனது மக்கள் நீதி மய்யம்
-
கடைசி நாளில் களைகட்டியது; இபிஎஸ், நயினார் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல்
-
திடீர் திடீரென மாறும் வேட்பாளர்கள்:"திக் திக்" திகிலில் கட்சி தொண்டர்கள்!
-
புதுச்சேரியில் 6 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்; ராகுல் வாக்குறுதி
-
ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தி மீண்டும் போட்டி; தந்தைக்காக விட்டுக்கொடுத்தார் மகன்