விருத்தாசலம் தொகுதி பா.ம.க., வேட்பாளர் கூட்டணி கட்சியினரிடம் ஆதரவு சேகரிப்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் மருத்துவர் தமிழரசி ஆதிமூலம் கூட்டணி கட்சி நிர்வாகிகள், வர்த்தகர் சங்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு சேகரித்தார்.

அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், பா.ஜ., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா., புதிய நீதிகட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பா.ம.க., வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் அன்புமணி வெளியிட்டார். அதில், விருத்தாசலம் சட்டசபை தொகுதியில், பா.ம.க., மாநில மகளிரணி செயலர் மருத்துவர் தமிழரசி ஆதிமூலம் போட்டியிடுவதாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, வேட்பாளர் மருத்துவர் தமிழரசி ஆதிமூலம், பா.ம.க., மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட செயலர் கார்த்திகேயன், திருஞானம், அ.தி.மு.க., மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், விருத்தாசலம் அனைத்து வர்த்தகர் சங்க தலைவர் கோபு ஆகியோரை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது, பா.ம.க., நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். முன்னாதாக, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், தமிழரசி ஆதிமூலம் வீட்டின் முன், பா.ம.க., நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Advertisement