திட்டக்குடி அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் எம்.ஜி.ஆர்., ஜெ., சிலைகளுக்கு மாலை அணிவிப்பு
திட்டக்குடி:திட்டக்குடியில் அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன், எம்.ஜி.ஆர்., ஜெ., சிலைகளுக்கு மாலை அணிவித்து பிரசாரம் துவக்கினார்.
திட்டக்குடி (தனி) சட்டசபை தொகுதியில் போட்டியிட அ.திமு.க., சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் முருகுமாறன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, நேற்று காலை 9:15 மணியளவில் மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் முன்னிலையில், வேட்பாளர் முருகுமாறன், வதிஷ்டபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெ., மற்றும் அண்ணாதுரை சிலைகளுக்கு மாலை அணிவித்து, பிரசாரத்தை துவக்கினார்.
தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமைக்கப்பட்ட அ.தி.மு.க., தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. விருத்தாசலம் (வடக்கு) ஒன்றியம், மங்களூர் (மேற்கு) ஒன்றியங்களைச் சேர்ந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் அருண்மொழிதேவன் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
நகர செயலாளர் நீதிமன்னன், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், பாண்டியன், ராஜேந்திரன், முத்து, வர்த்தக அணி சக்திவேல், நிர்வாகிகள் முல்லைநாதன், டாக்டர் கொளஞ்சிநாதன், முத்துராமன், மதியழகன், விருத்தாசலம் நகர செயலாளர் சந்திரகுமார், ஒன்றிய செயலாளர் வேல்முருகன், நகர துணை செயலாளர் அரங்க மணிவண்ணன், பாஜ., மாவட்ட தலைவர் தமிழ் அழகன், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் முருகேசன், பா.ம.க., மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், ஐ.ஜே.கே., மாவட்ட செயலாளர் அசோக்குமார், த.மா.கா., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.