கோடை வெயிலை தாங்க முடியாமல்தண்ணீரை தேடி அலையும் விலங்குகள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு வாரமாக கோடைவெயில் வாட்டி வதைப்பதால் விலங்குகள் தண்ணீரை தேடி திரிகின்றன.
தமிழகத்தில் கோடைக்காலம் மார்ச் துவங்கி ஜூன் வரை நீடிக்கும். நடப்பு ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் நீர்நிலைகளை தேடி விலங்குகள் சுற்றித்திரிகின்றன. ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வழக்கத்துக்கு மாறாக கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் வெப்பத்தில் இருந்து விலங்குகள் நீர்நிலைகளை தேடி அலைகின்றன. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்குள் நேற்று வந்த குரங்கு வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தண்ணீரை தேடி அலைந்தது. அங்கிருந்த குடிநீர் பைப்பில் இருந்து சொட்டு சொட்டாக வடிந்த தண்ணீரை குடித்தது. அப்போதும் தாகம் தீராமல் ஏக்கத்தோடு திரிந்த குரங்கை பார்த்த அப்பகுதி மக்கள் பாட்டிலில் கொண்டு வந்த தண்ணீரை குரங்கிற்கு கொடுத்தனர். விலங்குகள், பறவைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய குடியிருப்பு பகுதியில் தண்ணீர் வைக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
--
மேலும்
-
சட்டம் ஒழுங்கு சரியில்லை என வாட்ஸாப்பில் அவதுாறு; கனிமொழி புகார்
-
நவீன வசதியுடன் கூடிய வாகனம் :தீயணைப்பு துறையினர் மகிழ்ச்சி
-
மானாமதுரையில் ஏப். 21ல் சித்திரை விழா துவக்கம்: வைகை சுத்தப்படுத்தப்படுமா:பக்தர்கள் எதிர்பார்ப்பு
-
திருப்புத்துார் தொகுதி மக்களின் தேவைகள் எதிர்பார்ப்பு வேட்பாளர்களின் வாக்குறுதிகளாக மாறுமா
-
காங்., நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு
-
பாக்., பல துண்டுகளாக சிதறும்: அமைச்சர் ராஜ்நாத் எச்சரிக்கை