18 தொகுதிகளில் திமுக Vs பாஜ போட்டி!
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுகவும், பாஜகவும் இம்முறை 18 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன. மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணிக் கட்சிகளை பாஜ எதிர்கொள்கிறது.
திமுக Vs பாஜ மோதும் தொகுதிகள்;
1. மயிலாப்பூர்
2. அவிநாசி
3,திருப்பூர் (தெற்கு)
4. கோவை (வடக்கு)
5. புதுக்கோட்டை
6. திருப்பத்தூர்
7. சாத்தூர்
8. திருச்செந்தூர்
9. வாசுதேசநல்லூர்
10. ராதாபுரம்
11. நாகர்கோவில்
12. ஆவடி
13. திருவண்ணாமலை
14. தஞ்சாவூர்
15. திருவாரூர்
16. மானாமதுரை
17. ராமநாதபுரம்
18. ராசிபுரம்
இந்த 18 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. பாஜ தரப்பில் இன்னமும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதில், திருவண்ணாமலையில் அமைச்சர் வேலு, ஆவடியில் அமைச்சர் நாசர், ராசிபுரத்தில் அமைச்சர் மதிவேந்தன், ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு ஆகியோரை, பாஜ வேட்பாளர்கள் எதிர்கொள்ள உள்ளனர்.
18 தொகுதிகளை தவிர்த்து பாஜ போட்டியிடும் எஞ்சிய தளி, மொடக்குறிச்சி, திருப்பூர் மேற்கு, ஊட்டி, கந்தர்வக்கோட்டை, விளவங்கோடு, அறந்தாங்கி, குளச்சல், பத்மநாபபுரம் ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன.
வாசகர் கருத்து (3)
Priyan Vadanad - Madurai,இந்தியா
28 மார்,2026 - 22:11 Report Abuse
ஒரு சின்ன ஆசையாக பாவக்கா தனது முக்யமான எதிராளரான நோட்டாவை தோற்கடிக்க வேண்டும். 0
0
Ramesh - Chennai,இந்தியா
29 மார்,2026 - 01:47Report Abuse
அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்பதற்கான ஒரே ஒரு நியாமான காரணத்தை உங்களால் கூற முடியமா? இந்த வாட்ஸாப்பில் & முகநூலில் பகிரப்படும் ஆதாரமற்ற செய்திகளை காரணமாக காட்ட கூடாது. வருங்காலத்தில் தத்திகளுக்கு பஞ்சம் இருக்காது என்பதை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே உணர்ந்த திருவள்ளுவர் நமக்காக ஒரு அழகான குறளை சொல்லியுள்ளார் அது "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு". 0
0
Reply
உண்மை கசக்கும் - Chennai,இந்தியா
28 மார்,2026 - 22:06 Report Abuse
இரண்டு திருடர் கட்சிகளும் சேர்ந்து கொண்டு பா ஜ க விடமே கோடிகள் வாங்கி கொண்டு பா ஜ வை ஒழிக்க திட்டமிட்டு சதி செய்கிறார்கள். எடப்பாடி ஸ்டாலின் இருவருமே விஷ பாம்புகள். 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement