தனக்காக எம்.எல்.ஏ.,பதவி இழந்த கதிர்காமுவிற்கு 'சீட்' வழங்கிய தினகரன்
தேனி:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் கட்சி உடைந்ததில் டி.டி.வி., தினகரன் ஆதரவாளராக செயல்பட்டு எம்.எல்.ஏ., பதவி இழந்த கதிர்காமுவிற்கு பெரியகுளம் தொகுதியில் அ.ம.மு.க., சார்பில் போட்டியிட தினகரன் வாய்ப்பு வழங்கி உள்ளார்.
பெரியகுளம் தொகுதியில் 2016ல் அ.தி.மு.க., சார்பில் டாக்டர் கதிர்காமு வெற்றி பெற்றார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு தினகரன் ஆதரவாளர்களான அ.தி.மு.க.,வில் வெற்றி பெற்ற தங்கதமிழ்செல்வன், கதிர்காமு, ஜக்கையன் மாறினர். இதில் ஜக்கையன் ஆதரவை திரும்ப பெற்றார். தினகரனுக்கு ஆதரவளித்த கதிர்காமு, தங்கதமிழ்செல்வன், செந்தில்பாலாஜி உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டன. இந்நிலையில் தினகரன் அ.ம.மு.க., 2018 மார்ச்சில் துவங்கினார். அப்போதில் இருந்து கதிர்காமு கட்சியில் நிர்வாகியாக இருந்துவருகிறார். தங்கதமிழ்செல்வன், செந்தில்பாலாஜி ஆகியோர் தி.மு.க.,விற்கு தாவினர்.
இந்நிலையில் அ.தி.மு.க., பா.ஜ., வுடன் சட்டசபை தேர்தலில் தினகரன் கூட்டணி அமைத்துள்ளார். ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடுவார் என பேசப்பட்டது. ஆனால், தனக்காக எம்.எல்.ஏ., பதவியை இழந்ததால் கதிர்காமுவிற்காக பெரியகுளம் தொகுதியை தினகரன் கேட்டு பெற்று கதிர்காமுவை வேட்பாளராக அறிவித்துள்ளார்.