கூலி தொழிலாளி வெட்டி கொலை
சின்னமனூர்:சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரில் கூலி தொழிலாளி சூர்யா 29, என்பவர் ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தனர். கொலையாளிகளை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
எரசக்கநாயக்கனூர் மந்தையம்மன் கோயில் தெரு செல்லத்துரை மகன் சூர்யா 29, இவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், நிவேதா, கீர்த்தனா என்ற இரு மகள்களும் உள்ளனர். வாழைத்தோட்ட கூலி தொழிலாளி. நேற்று மதியம் எரசக்கநாயக்கனூரில் மெயின் ரோடு வங்கி அருகில் உள்ள கடையில் டீ குடித்து விட்டு செல்லும் போது, இரண்டு டூவீலர்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சூர்யாவை கத்தியால் குத்தியது. காயத்துடன் சூர்யா உயிருக்கு பயந்து ஓடியுள்ளார். ஓடும் போது கால் இடறி கீழே விழுந்தார். துரத்தி வந்த அந்த கும்பல் சூர்யாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் அதே இடத்தில் பலியானார். சின்னமனூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கொலையானவரின் உறவினர்கள் பொதுமக்களும் எரசை -- சின்னமனூர் ரோட்டில் சாலை மறியல் செய்தனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
கொலையாளிகள் யார், கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சின்னமனூர்
மேலும்
-
மதுரையை கோட்டைவிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்; புலம்பி தவிக்கும் தோழர்கள்
-
தி.மு.க., மறந்து போன பள்ளி கல்வி துறை வாக்குறுதிகள்
-
செவியில் விசிலை ஊதி அனுப்புங்கள்: பிரசாரத்தில் விஜய் வேண்டுகோள்
-
தி.மு.க., வேட்பாளர்களில் நால்வர் மட்டுமே முஸ்லிம்!
-
கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வழக்கு பதில் கோரும் உயர்நீதிமன்றம்
-
பிரபாகரன் மீது ஆணையிட்டு நாம் தமிழர் வேட்பாளர் மனு