தமிழக கேரள எல்லையில் போலீசார் தீவிர சோதனை: போதைப் பொருள் கடத்தலை தடுக்க நடவடிக்கை

போடி:சட்டசபை தேர்தலை ஒட்டி தமிழக, கேரள எல்கை வழியாக போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பொருள், இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கப்படுவது ஒரு பக்கம் இருந்தாலும் தொண்டர்களின் எதிர் பார்ப்பை சரி செய்யும் வகையில் அரசியல் கட்சியினர் மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைப்பது வழக்கம். டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் வாங்கினால் கூடுதல் விலை கொடுக்க வேண்டும் என்பதற்காக வரி செலுத்தாமல் மது தொழிற்சாலைகளில் இருந்து கொண்டு வரப்படும் இரண்டாம் தர மதுபாட்டில்களை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்குவது உண்டு. டிமாண்ட் அதிகரிக்கும் போது போலி மது பாட்டில்கள் புழக்கத்திற்கு வர வாய்ப்பு உள்ளது. இதனால் உடல் பாதிப்பு, உயிரிழப்பு உள்ளிட்ட விளைவுகள் ஏற்படும். இதுபோல கஞ்சா, எரி சாராயம் கடத்துவதை தடுக்கும் வகையில் தமிழக முழுவதும் முன் கூட்டியே போலீசார் தயார் படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் தமிழக, கேரள எல்கை வழியாக போலி மதுபாட்டில்கள், கஞ்சா, எரி சாராயம் கடத்தப் படுவதை தடுக்கும் வகையில் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

Advertisement